கொரோனா வைரஸின் தோற்றம் எப்படி இருக்கும்? முதல் முதலாக வெளியிடப்பட்டுள்ள படம்

942shares

உலகம் முழுவதும் தற்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இதன் தாக்கத்தினால் 190 இற்கும் அதிகமான நாடுகள் முடங்கிப் போயிருக்கின்றன. 27000 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தினை குறைப்பதற்கு உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் இதற்கான மருந்தினை இன்னமும் எவரும் கண்டறியவில்லை என்பது வரலாற்றில் பதியப்பட வேண்டியதாக மாறியிருக்கிறது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொடர்பில் இதுவரை காலமும் அதன் தோற்றத்தை ஒத்த மாதிரியையே வெளியிட்டுவந்தனர். ஆனால் தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்), தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) அதன் படத்தினை துல்லியமாக எடுத்து வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் முதன்முதலாக அறியப்பட்ட கொரோனா நோயாளியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கொரோனா வைரஸின் புகைப்படத்தைஆகியவை இணைந்து முதன்முதலாக நுண்ணோக்கி மூலம் வெளியிட்டுள்ளன.

இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் நுண்ணோக்கி மூலம் மின்னணுப் பரிமாற்ற முறையில் படம் பிடிக்கப்பட்டு இந்திய ஜேர்னல் ஒப் மெடிக்கல் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “டிரான்ஸ்மிஸன் எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பி இமாஜிங் ஆஃப் சார்ஸ்-சிஓவி-2” என்ற தலைப்பில் இக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சலின், என்ஐவி ஆகியவற்றில் உள்ள ஆய்வாளர்கள் குழு இந்தக் கட்டுரையை எழுதியுள்ளனர்.

சீனாவில்கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பின் வுகான் நகரில் படித்துவந்த கேரள மாணவிகள் கடந்த ஜனவரி 30ஆம் திகதி இந்தியாவுக்கு வந்தனர். அவர்களிடத்தில் மருத்துவர்கள் ஆய்வு செய்தபோது ஒரு மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாணவியிடம் இருந்து எடுக்கப்பட்ட வைரஸின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் இருந்து எடுக்கப்பட்ட வைரஸின் புகைப்படமும், அந்தப் பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட வைரஸும் 99.98 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் பார்ப்பதற்கு வட்ட வடிவத்திலும், கூம்பு போன்று மேல்புறத்தையும் கொண்டுள்ளது. கொரோனா வைரஸின் மேற்புறத்தில் கிளைக்கோபுரோட்டீனைக் கொண்ட பெப்லோமெரிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

“இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளியின் தொண்டைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட கொரோனா வைரஸின் தோற்றமாகும். இதுதான் இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் குறித்த முதல் படம். இந்தக் கொரோனா வைரஸின் ஒவ்வொரு துகளும் நன்றாகப் பாதுக்காப்பட்டுள்ளது. 75 என்எம் அளவில் இந்தக் கூறுகள் இருக்கின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆட்டிப் படைக்கு இந்த வைரஸ் தாக்கத்தினால் தற்போது வரை ஐந்து இலட்சத்திற்கும் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி