ஊரடங்கு வேளையில் அவசர பயணத்திற்கு செய்ய வேண்டியது என்ன? முழுமையான தகவல் இதோ

73shares

இந்தியா முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. பொது மக்களின் நன்மை கருதி மத்திய மாநில அரசாங்கங்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகின்றன.

இதற்கிடையில், பிரதமரின் நிவாரண நிதியத்திற்கும், முதலமைச்சரின் நிதியத்திற்கும் ஏராளமான தன்னார்வ தொண்டர்களும் பிரபலங்களும் நிதியளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதேவேளை, பொது மக்கள் அரசாங்கத்தின் அறிவுரைகளையும் சுகாதார அமைப்புக்களின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி நடக்குமாறும், கொரோனா தொற்றிலிருந்து நம்மையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத் தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவசர தேவைகள் ஏதேனும் ஏற்படின் அதற்கான சில நடவடிக்கைகளை அரசாங்கம் அறித்துள்ளது.

அதன் அடிப்படையில்,

  • சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ, திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக பயணம் செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

  • 7530001100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது வாட்ஸ் ஆப் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

  • gcpcorona2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமாக விண்ணப்பிக்க முடியும்.

  • மேற்கொண்ட காரணங்களுக்காக அனுமதி சீட்டினை பெறுவதற்கு கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

  • இச்சேவை அவசரமான தேவைகளுக்கு மட்டுமே அன்றி சாதாரண தேவைகளுக்கு அல்ல

இது போன்ற அவசர தேவைகளுக்கு மக்களை தொடர்பு கொள்ளுமாறு சென்னை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி