ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

216shares

ஊரடங்கால் வேலையை இழந்து, செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த தம்பதியினர் தங்களது குழந்தையை 22 ஆயிரம் ரூபாவிற்கு விற்ற கொடூர சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மதன் சிங் சரிதா தம்பதியினரே இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கூலித் தொழிலாளியான மதன் சிங்கிற்கு தற்போது எந்த வருமானமும் இல்லை. அவருடைய சொந்த மாவட்டமான மெகபூபா மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே 7 வயதில் மகன் இருக்கும் நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அதேநேரத்தில், கொரோனா ஊரடங்கு காரணமாக மதன் சிங் வேலையை இழந்து, வீட்டுச் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்த நிலையில், நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த பக்கத்து வீட்டாருக்கு, பணத்துக்காக குழந்தையை விற்றுள்ளனர்.

இவ்வாறு 22 ஆயிரம் ரூபாவிற்கு பேரம் பேசி குழந்தையை விற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த தகவல் பொலிஸாரிற்கு தெரிந்ததையடுத்து, குழந்தையை விற்ற பெற்றோர், குழந்தைய வாங்கியவர், மற்றும் இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் அடங்கலாக ஐவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கபட்டுவருகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்