தாஜ் ஹோட்டலுக்கு விடுக்கப்பட்டது வெடிகுண்டு மிரட்டல்! வளாகத்தை சுற்றி குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தரப்பினர்

44shares

மும்பையில் அமைந்துள்ள தாஜ் ஹோட்டல்களுக்கு பாகிஸ்தானிலிருந்து வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, தாஜ் ஹோட்டலுக்கு உள்ளேயும் அதன் சுற்றுப்புறங்களிலும் தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2006ல் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேருக்கு இன்று தண்டனை வழங்க உள்ள நிலையில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கராச்சியிலிருந்து நேற்று இரவு மர்ப நபர் ஒருவர் அழைப்பை ஏற்படுத்தி கடந்த 2008 நவம்பரில் நடைபெற்றதை போன்று தாஜ் ஹோட்டலில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக நான் கேள்விப்பட்டேன் எனவும் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளார்.

இதனையடுத்து, மும்பையின் கொலாபா மற்றும் பாந்த்ரா ஆகிய இரண்டு தாஜ் ஹோட்டல்களுக்கும் அருகிலுள்ள பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக மும்பை பொலிஸார் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2006ல் தாஜ் ஹோட்டல் உட்பட மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!