கொரோனாவால் திணறும் இந்தியா - நிலவும் தட்டுப்பாடு

50shares

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிகமான தொற்று ஏற்பட்ட நாடாக இந்தியா மாறியுள்ளது.

உலகில் ஏனைய நாடுகளை விட மிக வேகமாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவி வருகின்றது.

செவ்வாய்க்கிழமை வரையான கடந்த ஐந்து நாட்களில் நாளாந்த தொற்று எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது.

அத்துடன் இந்தியாவில் இதுவரை 80 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், தீவிர சிகிச்சைக்கான படுகைகள் மற்றும் ஒக்ஸியன் விநியோகத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது மரண வீதம் குறைவாக காணப்படுகின்றது.

வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தை மீட்கும் வகையில் கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தியுள்ள நிலையில், கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது.

அநேகமான பணியிடங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் வழமைக்கு திரும்பியுள்ளதுடன், பல நகரங்களில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் உணவங்கள் மற்றும் மதுபானசாலைகள் தமது சேவைகளை மீள ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது - டக்ளஸிற்கு பதில்

ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது - டக்ளஸிற்கு பதில்