தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது பெற்றோரின் பொறுப்பு என்றும் இதை இலகுவாக எடுத்துக்கொள்வது பொறுப்பல்ல என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹோமாகமவில் மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது - தொற்று நோயை எதிர்கொள்வதற்காக பிள்ளைகளின் கல்வியை தாமதப்படுத்த முடியாது என அவர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்து வரும் நிலையிலேயே பிரதமர் இந்தக் கருத்துகளை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.