விமர்சனங்களை நேர்மறையாக அணுகுவோம்.. வாழ்க்கைப்பாதை தெளிவாகிடவே.!

8shares

தனி மனிதன் ஒருவரின் செயல் துவங்கி, ஓர் அமைப்பின் - தேசத்தின் செயல்பாடுகள் வரை எல்லாமே இங்கு விமர்சனப்பார்வைக்கு உட்படுகிறது. காரணம், நாம் செய்கிற எந்த ஓர் செயலையும் மறுப்பேதுமின்றி ; மாற்றுக்கருத்துக்கள் ஏதும் இன்றி இந்த உலகும், இன்ன பிறரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இங்கு இல்லை. ஏனெனில், ஒவ்வோர் தனிப்பட்ட நபருக்கும் இங்கு ஒவ்வொன்றை குறித்தும் தனித்த பார்வைகள் உள்ளது.

ஓர் விடயம் குறித்து பலர் தங்கள் கருத்துக்களை முன் வைத்திடுவதே இங்கு விமர்சனமாக கருதிடப்படுகிறது. அதே சமயம், விமர்சனங்களை இரு வகைப்படுத்தலாம். ஓர் விடயம் அல்லது நபர் குறித்து இயன்றவரை நேர்மையானதோர் பார்வையை முன் வைப்பது ஓர் வகை என்றால், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை மனதில் கொண்டு விமர்சிப்பது என்பது இரண்டாவது வகை.

அதேபோல், தம்மை நோக்கி வைக்கப்படும் விமர்சனங்களை அணுகுவதில் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறான். நம்மை குறித்து வைக்கப்படும் விமர்சனங்களை இயன்றவரையாக நேர்மறை எண்ணத்துடன் அணுகிட முயலுவோம். நம்மை ; நமது செயல்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்துவோம். அதன் மூலம் நம்மில் சிறந்தவற்றை நாமே கண்டடையலாம். ஏனெனில், நாம் செய்வது தவறு என்று நமது மனம் எப்போதும் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆகவே, விமர்சனங்களை இயன்றவரை நேர்மறை எண்ணத்துடன் அணுகுவோம். வாழ்க்கைப்பாதை சீராகிடவே.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க