போர் தின்ற மண்ணில் நோய் தின்னும் நாட்கள்...

66shares

தாயகம் கிளிநொச்சி - பூநகரி பகுதியில் வாழும் 48 வயதுடைய T கணேசலிங்கம் தலையில் நோய்க்கட்டியுடன்

மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். போர்க்கால சூழல் மிகவும் கடினப்படுத்திய மக்களை இன்று பலவாறான நோய் தாக்கியபடி அவர்களின் வாழ்வை சிதைத்துள்ளது.


அன்றாட வாழ்விற்கு மிகவும் சிரமப்படும் குடும்பங்கள் தாயக மண்ணில் ஆயிரம் ஆயிரம் அவர்களில் கணேசலிங்கம் குடும்பமும் விதி விலக்கல்ல. உழைத்து குடும்பத்தை பார்க்க்க வேண்டிய அவர் இப்பொது இயங்கு நிலையற்று வறுமையில் எதுவும் செய்வதறியாது தலையில் ஏற்பட்ட 'கட்டி' காரணமாக இன்று மிகவும் வேதனையுடன் வாழ்ந்து வருகிறார்.


தலையில் இருக்கும் கட்டியில் இருந்து வரும் கழிவுகளை பைப் மூலம் அகற்றியபடி கடந்த பல வருடங்களாக சிரமப்படுகொண்டிருக்கும் கணேசலிங்கம் அவர்களின் வறுமை போக்கி அவரது நோய் மாற்றுவதற்கான உதவிகளை புலம்பெயர் மண்ணில் வாழும் உறவுகளிடம் அவரது குடும்பம் கேட்டு நிற்கிறது.


இதையும் தவறாமல் படிங்க