விடுதலைப் புலிகள் தொடர்பான பதிவுகளுக்கு தடைபோடும் முக்கிய சமூக வலைத்தளம்!!

157shares
Image

விடுதலைப் புலிகள் தொடர்பான காட்சிகளை முக்கிய சமூக வலைத்தளமான YouTube தனது தளத்தில் இருந்து அகற்றிவருவதான குற்றச்சாட்டுக்களை பல சமூக ஆர்வலர்கள் வெளியிட்டு வருகின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றுப்;பதிவுகள்> பாடல்கள் உட்பட பல காட்சிகள் YouTube இல் இருந்து அதன் நிர்வாகம் அகற்றியுள்ளதாகத் தெரியவருகின்றது.

ஈழத்து இசைக்கலைஞரும்> ஊடகவியலாளருமான தீனா இசையமைத்து வெளியிட்டிருந்த 'தமிழின் ஆணிவேர்' என்கின்ற பாடலை சமூகம் சார்ந்த தமது வரையறைகளை மீறுவதாகக் கூறி> தனது தளத்தில் இருந்து YouTube அகற்றி உள்ளது.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தப் பாடல் வெளியிடப்பட்டிருந்தது.

இதேபோன்று விடுதலைப் புலிகள் சார்ந்த காட்சிகளை YouTube நிர்வாகம் அகற்றிவருவதான பல குற்றச்சாட்டுக்களை தமிழ் ஆரவலர்கள் வெளியிட்டு வருகின்றார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு 9 வருடங்கள் கடந்துவிட்டுள்ள நிலையில்> கடந்த கால வரலாற்றுப் பதிவுகளும் கூட அழிக்கப்படவேண்டும் என்கின்ற நோக்கத்தின் ஒரு வெளிப்பாடாக இது இருக்கலாமா என்கின்ற கேள்விகளும் பரவலாக தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டுவருகின்றது.


இதையும் தவறாமல் படிங்க