கைதான பாதாள உலக குழுவினருக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!

76shares

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷ் உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கின் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என வெளிவிகார அமைச்சின் பேச்சாளர் சரோஜா கிரிசேன தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தூதரகம் ஊடாக மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அபுதாபி மற்றும் டுபாயில் உள்ள தூதரகங்களூடாக அந்த நாட்டின் அதிகாரிகளுடன் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மாகந்துரே மதூசுடன் கைதானவர்களுக்காக நீதிமன்றில் முன்னிலையாவதற்காக இலங்கையிலிருந்து சட்டத்தரணிகள் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதுஎவ்வாறிருப்பினும் வெளிநாடு ஒன்றில் கைதாகியுள்ள இலங்கையர்களுக்காக, இலங்கை சட்டத்தரணிகள் முன்னிலையாக முடியாது என சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளா அமல் ரந்தெனிய தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை சட்டத்தரணிகளால் கைதானவர்களுக்கு சட்ட ஆலோசனைகள் மட்டுமே வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க