கணவரை இழந்த இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு மரண தண்டனை - எழுந்தது கண்டனம்

78shares

சவூதி அரேபியாவில் நைஜீரிய பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், நைஜீரிய அரசாங்கமும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

இரண்டு பிள்ளைகளுக்கு தாயானவரும் கணவரை இழந்தவருமான குறித்த பெண், போதை வஸ்தினை சவுதி அரேபியாவிற்குள் கொண்டு செல்ல முற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் 20 நைஜீரியர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என தெரிவித்து மரண தண்டனை வழங்கப்பட்டு சவூதி அரேபியாவில் சிறையடைக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய வெளிவிவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க