இன்று அதிகாலை பல நாடுகள் அதிர்ந்தன! மக்கள் அச்சத்தில்!!

49shares

பப்புவா நியூகினியாவில் 7 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது, அந்த நாட்டு நேரப்படி இன்று அதிகாலை இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இதன் போது ஏற்பட்ட பாதிப்புக்கள் இதுவரை கண்டறியப்படவில்லை,இந்த நில நடுக்கத்தையடுத்து மேலும் 6 மற்றும் 5 ரிச்டர் அளவுகளை அண்மித்த நில அதிர்வுகள் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

இதற்கு முன்னர் பப்புவா நியூகினியில் கடந்த பெப்ரவரி மாதம் பதிவான 7.5 ரிச்டர் அளவான நில அதிர்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை இந்தோனிஷியாவின் பாலி தீவுகளில் 6 ரிச்டர் அளவிலான நில அதிர்வொன்று இன்று பதிவாகியுள்ளது. இதன் போது மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சில கட்டடங்கள் ஜாவாவில் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ரஷ்யாவிலும் 6.3 ரிச்டர் அளவிலான அதிர்வொன்று இன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவி சரிதவியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
`