நாடாளுமன்ற நேரலை விவகாரம்: சபாநாயகரிடம் மன்னிப்புக் கேட்ட மஹிந்தவாதி

36shares

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபத்தின் தலைவர், நாடாளுமன்றத்தின் அறிவுறுத்தல்களை புறந்தள்ளி, தன்னிச்சையாக செயற்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கடுமையானகுற்றச்சாட்டொன்றை முன்வைத்திருக்கின்றார்.

சிறிலங்கா ஜனாதிபதியால் குருநாகல் மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து இலங்கை ஒலிபரப்புக்கூட்டத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கலாநிதி சோமரத்ன திஸாநாய்கக, நாடாளுமன்றசெயலாளர் நாயகம் மற்றம் துணை செயலாளர் நாயகம் ஆகியோர் அறிவுறுத்தியிருந்தநிலையிலும் நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒலிப்பு செய்வதை இடைநிறுத்தியிருந்த நடவடிக்கையைஅகங்காரம் என்று குறிப்பிட்டிருந்த சபாநாயகர் அதற்கு கடமு் கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அரசாங்கத்திடம் பணத்தை அறிவிட்டுக்கொண்டு ஒலிபரப்புக்கூட்டுத்தானபம் நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பான நேரலையை இடை நிறுத்தி வைத்ததன்மூலம் தகவல் அறிந்துகொள்ளும் மக்களின் சுதந்திரத்தை அப்பட்டமாக மீறியுள்ளதாகஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம்சாட்டியிருந்ததுடன், இதற்கஎதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாகநடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்றத்தில் வாக்குறுதி அளித்திருந்த சபாநாயகர் டிசெம்பர்ஐந்தாம் திகதியான இன்றைய தினம் மாலையே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்தலைவர் கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுனில்ஹெட்டியாராச்சி ஆகியோரை அழைத்து வினவியிருந்தார்.

இதன்போது நாடாளுமன்ற அமர்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்வதைஇடைநிறுத்தி வைத்ததற்காக சபாநாயகர் முன்னிலையில் மன்னிப்பை கோரியுள்ள இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர், உடனடியாக ஏற்பட்டுள்ள பிழைகளைசரிசெய்வதாக வாக்குறுதி அறிவித்ததாக சபாநாயகரின் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பிற்கு முன்னதாக சிறிலங்கா நாடாளுமன்றில் இந்த விவகாரம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜீத் பீ பெரேரா முறையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 அளவில் சபாநாயகர்கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியமுன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், நாடாளுமன்றஅமர்வை நேரடி ஒலிபரப்பு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளபோதிலும், சபை அமர்வுகள்நேரடி ஒலிபரப்பப்படுவதில்லை என சுட்டிக்காட்டினார்.

“இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், நாடாளுமன்றஅமர்வை நேரடி ஒலிபரப்பு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதோடு. அதற்கானகொடுப்பனவையும் பெற்றுக்கொண்டுள்ளது. எனினும் நாடாளுமன்ற அமர்வு நேரடி ஒலிபரப்புசெய்யப்படுவதில்லை.

இதுத் தொடர்பில் நாடாளுமன்றம் அறிவுறுத்திய போதிலும்அதனை, ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிராகரித்துள்ளார். இதுத் தொடர்பில் சட்ட நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும். அதனைவிட மக்களின் தகவல் அறியும் உரிமை இதன் ஊடாகமீறப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நிதி அவர்களுக்கு கட்டணமாகசெலுத்தப்பட்டு அதற்கான பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரச ஊடகம் என்ற வகையில்நாடாளுமன்ற அர்வை ஒலிபரப்ப வேண்டிய பொறுப்பும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குகாணப்படுகின்றது. இதுத் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களின் தகவல்அறியும் உரிமையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று அஜீத் பீ பெரேராவலியுறுத்தினார்.

இந்த சந்தர்ப்பத்தில், அஜித் பீ பெரேராவின் குற்றச்சாட்டிற்கு பதில்அளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட, சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தன்னிச்சையாக செயற்படுவதைஅவதானிக்க முடிவதாக குறிப்பிட்டார்.

“இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தான்நினைத்தப்படி செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஊடக அமைச்சின் செயலாளரும் இதுத்தொடர்பில் அக்கறையின்றி செயற்படுகின்றார். இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றசெயலாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மூன்று தடவைகள் இதுத்தொடர்பில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும்சரியான தீர்வுகள் கிடைக்கவில்லை. இதுத் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்சபாநாயகர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும்ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் ஸ்ரீலங்காரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவரை நேரில்சென்ற சந்தித்திருந்தனர்.

இந்த சந்திப்பின் போது கடந்த ஒரு மாதகாலமாகரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பக்கசார்பாக செயற்பட்டதாகவும் அரசாங்கம் எனக்அடையாளப்படுத்தப்பட்ட மஹிந்த ராஜபக்ச தரப்பு செய்திகளை மாத்திரம் ஒளிபரப்புசெய்ததாகவும் முறையிட்டனர்.

தற்பொழுது நாட்டில் அமைச்சரவையோ பிரதமரோ இல்லைஎனபதால் குறித்த நிறுவனத்தின் ஒளிபரப்பின் போது அனைத்து தரப்பினரையும்பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செய்திகளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்குமாறுநடாளுமன்று உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியிருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க