யாழ் தமிழர்களின் கலச்சாரத்தை சீரழிக்கச் சதி!!

1142shares

வட மாகாணத்திற்குரிய தனித்துவமான கலாசாரம் மற்றும்பண்பாடுகளை மாற்றி அமைக்கும் சதித்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக குற்றம்சாட்டியிருக்க வட மாகாண முதலமைச்சர், இதனால் அபிவிருத்திப் பணிகள், தூரநோக்குடையதாகவும், கபட நோக்கம் கொண்ட உள்நுழைவுகளைபுறந்தள்ளக்சுடிய வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வட மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் அங்குரார்ப்பணநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முதலமைச்சர் இந்தக் கோரிக்கையைவிடுத்திருக்கின்றார்.

வட மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் அங்குரார்ப்பணநிகழ்வூ யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலக கேட்போர்கூடத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில்இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு, வட மாகாண மகளிர் விவகார கூட்டுறவுத்துறைஅமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண சபை அவைத்தலைவர்சி.வி.கே.சிவஞானம், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது புதிதாக அங்குரார்ப்பாணம் செய்துவைக்கப்பட்ட பணியகஆளணிக்காக 9 நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டன. பணியகத்தின் தலைவராக ஓய்வூநிலைப்பேராசிரியர் கே.தேவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர், வடமாகாண மக்களின் கலாச்சாரம், பண்பாடு,பழக்கவழக்கங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படல்வேண்டும் என வலியுறுத்தினார்.

"வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சுற்றுலாஅபிவிருத்தி பணிகள் அனைத்தும் இப் பகுதி மக்களின் நன்மைகளையூம் வாழ்வாதாரமுன்னேற்றங்களையூம் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

மேலும் வட பகுதிக்கானகலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள்பிறழ்வூ அடையா வண்ணம் எமது அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்;. மத்திய அரசும் அதன்முகவர்களும் எமது ஒவ்வொரு முன்னெடுப்புக்களையூம் மிகக் கவனமாக உற்று நோக்கியவண்ணம் உள்ளனர் போல் தெரிகிறது.

வட மாகாணசபையால் முன்னெடுக்கப்படுகின்றமுன்னேற்றகரமான செயற்பாடுகளில் மத்திய அரசும் இடைச்செருகல்களை ஏற்படுத்தி எமதுதிட்டங்களைத் தாம் வளைத்துப் போட கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றது.

இதற்கானமிகச்சிறிய உதாரணம் ஒன்றைக் கூறுகின்றேன். எமது முன்னைநாள் விவசாய அமைச்சரும்வடமாகாணசபை உறுப்பினரும் ஆகிய கௌரவ ஐங்கரநேசன் அவர்களின் சிந்தனையில் உதித்ததே“அம்மாச்சி உணவகம்”.

அவர் ஒரு சைவ உணவகத்தை ஆரம்பித்து அதில் வட மாகாணத்திற்குரியபிரசித்தி பெற்ற உணவூவகைகளை அறிமுகம் செய்ததன் மூலம் எமது மக்களுக்கு வீட்டு உணவூபோன்ற உணவூ வகைகள் மலிவாகவூம் தரமாகவூம் கிடைக்க வழிவகை செய்தார்.

அத்துடன்வாழ்வாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள பல பெண்கள் இதன் மூலம் ஒரு தொழில்முயற்சியையூம் போதுமான வருவாயையூம் ஈட்டக்கூடிய வகையில் இத்திட்டம்அமைந்திருந்தது.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களுள் இது பற்றிஇலங்கைப் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் இதற்கான விசேட நிதிஒதுக்கீடுகள் திறைசேரியில் இருந்தும் இன்னும் பல அமைப்புக்களில் இருந்தும்ஒதுக்கப்பட்டது.

புதிய உணவகங்கள் கீரிமலைஇ நாவற்குழி கடற்கரை அருகாமை ஆகியபகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு அந்த உணவகங்களுக்கு ஹெல பொஜூன் என்று பெயர் வைக்கஎத்தனிக்கப்பட்டது.

ஆனால் அது நிறுத்தப்பட்டது. எமது உணவகங்களுக்கு நாம் தமிழில்பெயர் வைக்கவிருப்பதை அறிந்து அவற்றிற்குச் சிங்களப் பெயர் முன்வைக்க அரசாங்கம்முடிவெடுத்தது.

வடக்கு மாகாணம் இலங்கையின் பொதுச்சொத்தாக இந்த அம்மாச்சி உணவகத்தைமாற்றுவதற்கான செயற்பாடாகவே நாம் அவதானிக்கின்றௌம். ஆகவே இவ்வாறான விடயங்கள் எழும்போது எமது பாரம்பரியங்களையூம் மொழியையூம் கலை கலாச்சாரத்தையூம் கணக்கில்எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

உங்கள் முன்னெடுப்புக்கள் அனைத்தும் பெறுமதிமிக்கதாகவூம் தூர நோக்குடையதாகவூம் கபட நோக்கம் கொண்ட உள்நுழைவூகளைபுறந்தள்ளக்சுடிய வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என்பதை மனதில் இருத்தி நீங்கள்செயற்பட வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்" என்றார் முதலமைச்சர்.

வட மாகாணத்திலுள்ள வளங்களை வெளிமாகாணங்களில் இருந்துஅத்துமீறி நுழைபவர்கள் சுரண்டுவதற்கு ஊடகவியலாளர்களும், உடகங்களும்துணை போகக் கூடாது என்றும் முதலமைச்சர் இந்த சந்திப்பின் போது கோரிக்கைவிடுத்தார்.

“வடமாகாணத்தின் யாழ்குடா நாட்டுப்பகுதி மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ளதுடன்நிறைந்த கடல் உணவூ வளங்களைக் கொண்ட ஒரு பிரதேசம்.

எனவே இவ் வளங்கள் எமது மக்களின்வாழ்வாதார முன்னேற்றத்திற்கே பயன்பட வேண்டும்.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர்ஆழியவளைப்பகுதியில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவருக்கு 20 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான பாரைமீன்கள் கிடைக்கப்பெற்றதாகவூம் அதனால் ஒரே இரவில் அந்த மீனவர் கோடீஸ்வரராகமாறிவிட்டார் எனவூம் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.

அந்தவிளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டு ஒரு வாரம் கடக்க முன்னரே அப் பகுதியில் சிங்களமீனவர்களின் ஆக்கிரமிப்பு இடம் பெற்றது என்று அறிகின்றேன்.

அவர்களுடன் எமதுமீனவர்களும் பொதுமக்களும் அரசியற் தலைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறுநிலை ஏற்பட்டுள்ளது.

எமது ஒவ்வொரு அசைவூக்கும் பிறர்தரப்பில் இருந்து பல முனைத்தாக்குதல்கள் பொருளாதார ரீதியாகவூம், தொழில் முயற்சி வடிவிலும் வந்துகொண்டிருப்பதாக நாம் உணர்கின்றௌம்.

எமது சமூகஇ கலாச்சாரஇ பண்பாட்டு விழுமியங்கள்ஆகிய அனைத்தையூம் சீரழிக்க சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள் என்றேகொள்ள வேண்டியூள்ளது.

இந்த விடயங்கள் பற்றி இச் சபையில் நான் கூறுவதன் நோக்கம்உங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது ஏற்படக் கூடியஇடர்களையூம் மற்றும் தடைகளையூம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாலேயே" என்று மேலும் தெரிவித்தார் முதலமைச்சர்.

இதையும் தவறாமல் படிங்க