புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களால் விஜயகலாவுக்கு வந்த புதிய சிக்கல்!

64shares

விடுதலை புலிகள் மீண்டும் வர வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்திற்கு எதிராக பிரான்ஸில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலை புலிகள் மீண்டும் வர வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸில் வாழும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரான்ஸில் உள்ள இலங்கை தூதரத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அங்கு ஆர்ப்பாட்டகாரர்களை சந்திக்க சென்ற பிரான்சிற்கான இலங்கை தூதுவர் புத்தி பே அத்தாவுத தானும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு இலங்கையருக்கும் விடுதலை புலிகள் மீண்டும் தலை தூக்குவதனை விரும்புவதில்லை எனவும், அதற்கு ஒரு போதும், ஆதரவு வழங்குவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்பிக்குமாறு மகஜர் கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க
தமிழர் தாயகத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல்; நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

தமிழர் தாயகத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல்; நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாண மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி! பனை மரம்போல பல்கிப் பெருகவுள்ள மா மரங்கள்!!

யாழ்ப்பாண மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி! பனை மரம்போல பல்கிப் பெருகவுள்ள மா மரங்கள்!!

சிகிரியாவில் இளைஞர் யுவதிகள் செய்த அநாகரிக செயல்! பலர் முகம் சுழிப்பு!!

சிகிரியாவில் இளைஞர் யுவதிகள் செய்த அநாகரிக செயல்! பலர் முகம் சுழிப்பு!!