எதிா்க்கட்சி தலைவர் பதவி பறிப்பு விவகாரம் - சபாநாயகரின் அறிப்பு!

81shares
Image

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது நிலைப்பாட்டை இன்று சபாநாயகருக்குத் தெரியப்படுத்தவுள்ளது. பாராளுமன்ற அமர்வு வாரம் நாளை ஆரம்பிக்கிறது. நாளைய அமர்வில் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிரணியில் அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக தாம் இருப்பதால் தமக்கே எதிர்க்கட்சிப் பதவி வழங்கப்பட வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தொடர்ச்சியாக கோரி வருகிறது. இது தொடர்பில் எழுத்து மூல கோரிக்கையை முன்வைத்தால் ஆராய்ந்து பார்க்க முடியும் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.

இதற்கமைய ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எழுத்து மூலம் கோரிக்கைவிடுத்தது. இதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிலைப்பாட்டை சபாநாயகர் கேட்டிருந்தார். இன்றைய தினம் ஐ.ம.சு.முவின் நிலைப்பாட்டை அறிவிப்பதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் மஹிந்த அமரவீர சபாநாயருக்குப் பதில் வழங்கினார். இன்று ஐ.ம.சு.முவின் பதில் வழங்கப்பட்டால் நாளையதினம் பாராளுமன்றத்தில் சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது விடயத்தில் தமக்கு சாதகமான பதிலை சபாநாயகர் வழங்காவிட்டால் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தம்மை அங்கீகரிகாவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர இருப்பதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டார். அதேநேரம், ஐ.ம.சு.மு எடுக்கும் தீர்மானத்துக்கு அமைய எதிர்காலத்தில் அவர்கள் பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இது இவ்விதமிருக்க, சட்டத்துறை நிபுணர்கள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு பாராளுமன்றத்தில் தனியான கட்சி அங்கீகாரம் இல்லையெனச் சுட்டிக்காட்டியிருப்பதுடன், அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்வது பொருத்தமானதாக இருக்காது என்றும் தெரிவிக்கின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இந்தியாவின் உறுதியை நம்பி நடு காட்டிலிருந்து கடற்கரை நோக்கி பயணித்த பிரபாகரன்! நடந்தது என்ன? வெளியான புதிய தகவல்!!!

இந்தியாவின் உறுதியை நம்பி நடு காட்டிலிருந்து கடற்கரை நோக்கி பயணித்த பிரபாகரன்! நடந்தது என்ன? வெளியான புதிய தகவல்!!!

மூன்று மாத கர்ப்பிணி பெண்ணின் மரணம்; மாலை வரை சடலம் கடற்கரையில் கிடந்ததேன்?

மூன்று மாத கர்ப்பிணி பெண்ணின் மரணம்; மாலை வரை சடலம் கடற்கரையில் கிடந்ததேன்?