எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில் ஐ.ம.சு.கூபின் தீர்மானம்!

7shares
Image

எதிர்கட்சி தலைவராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனே தொடர்ந்தும் பதவிவகிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களின் சந்திப்பில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர கருத்துத் தெரிவிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் சந்தித்துப் பேச்சு வார்த்தை மேற்கொண்ட போதே மேற் கூறிய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளோம். மேலும் கட்சியின் முடிவை நாடாளுமன்ற சபாநாயகரிற்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க