சுகாதாரம் தொடர்பான கூட்டத் தொடரில் சுகாதாரமற்ற நீர் வழங்கல்!

5shares

கரைச்சி பிரதேச சபையின் ஏழாவது அமர்வின் போது சபை உறுப்பினர்களுக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட போத்தல்களில் உறுப்பினர்களின் முன்னிலையில் நீர் நிரப்பட்டு வழப்பட்டமையினால் சபையில் சர்ச்சை ஏற்ப்பட்டது.

இது தொடர்பில் அமர்வில் கலந்துகொண்ட பல உறுப்பினர்கள் தங்களது கடும் ஆட்சேபனையை தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கரைச்சி பிரதேச சபையின் ஏழாவது அமர்வு தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நேற்று காலை 9.30க்கு ஆரம்பமானது. இதன்போது சபையில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு பணியாளர்களால் குடிநீர் விநியோகிப்பட்டது. அதன்போது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட ஒரு லீற்றர் கொள்ளளவு வெறும் போத்தல்கள் 35 க்கு மேற்பட்டவை காட்போட் பெட்டி ஒன்றில் சபை மண்டபத்திற்குள் கொண்டுவரப்பட்டு அங்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பிய பெரிய போத்தல்களிலிருந்து குறித்த போத்தல்களில் நீர் நிரப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

இதன்போது சில சந்தர்ப்பங்களில் பணியாளர்கள் போத்தல்களில் நிரப்பிய நீரை அவதானித்த போது அதனை வெளியே கொண்டு சென்று ஊற்றுவிட்டு மீண்டும் குறித்த போத்தல்களில் நீர் நிரப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள்.

இது சபையில் உறுப்பினர்களுக்கிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியது. இதன் போது ஐக்கியதேசிய கட்சியின் உறுப்பினர் மருத்துவர் விஜயராஜன் நாங்கள் சுகாதாரத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம் ஆனால் இங்கு சுகாதாரத்திற்கு முற்றிலும் புறம்பான செயற்பாடு இடம்பெறுகிறது என்றும் இந்த போத்தல்கள் ஒரு தடவை மாத்திரமே பயன்படுத்தப்படல் வேண்டும் என்றும் அதற்கேற்ற வகையில்தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அத்தோடு சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அசோக்குமாரும் தனது கண்டனத்தை தெரிவித்தார். பின்னர் பிற்பகல் சபை அமர்வின் போது புதிதாக போத்தல் நீர் கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க