சிங்களவர்களைத் திருப்திப் படுத்தினாலே தமிழருக்கு உரிமை! மஸ்தான்.

40shares

தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டால் மாத்திரமே வடக்கில் உள்ள தமிழ் மக்களின் உரிமை பிரச்சினைகளை நல்லாட்சி அரசாங்கம் கையாள முடியும் என பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் அபிவிருத்தியை பெற்றுக்கொள்ளும் அதேவேளை உரிமைகளையும் பெற்றுக்கொள்ள தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான், தமிழ் மக்கள் அபிவிருத்தியுடனேயே உரிமைகளை பெற வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 800 ற்கும் மேற்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இழப்பீட்டு கொடுப்பனவுக்களை கோரும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவைகள் காணப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தகவல் வெளியிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க