அலரி மாளிகையில் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு!

14shares

இந்து சமுத்திர வலய நாடுகள் மற்றும் இந்து சமுத்திரத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் பொதுவான அபிலாஷைகள் மற்றும் பிரச்சினைகளுக்குரிய காரணிகளை கலந்துரையாடும் மேடையை நிர்மாணிக்கும் மாநாடு நாளை ஆரம்பமாகவுள்ளது.

நாளை 11 ஆம் திகதியும், நாளை மறுதினமான 12 ஆம் திகதியும் இரு தினங்களாக இந்த மாநாடு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண உரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதான உரையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஆற்றவுள்ளனர்.

ஐக்கிய நாடுகளது செயலாளர் நாயகத்தின் சமுத்திர விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி பீட்டர் தொம்சனும் இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். உலக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்திற்கு நேரடி தாக்கத்தை விளைவிக்கும் மூன்றில் இரு பகுதி எரிபொருள் கப்பல்களும், சரக்குகளை ஏற்றிச் செல்லும் மூன்றில் ஒரு பகுதி கப்பல்களும் பயணிக்கும் முக்கிய கேந்திர தொடர்பாடல்களை கொண்ட கடல் மார்க்கமாக இந்து சமுத்திரம் திகழ்கின்றது.

அத்துடன் இந்து சமுத்திரம் உலகின் மிகவும் பரபரப்பு மிக்க மற்றும் தீர்மானமிக்க ஒரு அமைவிடமாக மாறியுள்ள சூழ்நிலையில் இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுகின்றது. இலங்கை வலயத்தின் வர்த்தக சேவைகள் மற்றும் நிதிக் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு அமைவிடமாக மாற்றும் அரசாங்கத்தின் கொள்கை, இந்த மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
`