தமிழர் தாயகப் பகுதிகளில் புத்தர் சிலைகளை அமைத்தவர்களை காட்டிக் கொடுத்த அமைச்சர்!

37shares

வடக்கில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலைகள் மீது தென்னிலங்கையில் இருந்து சென்ற சில விஷமிகளால் சேதமாக்கப்ப்டடிருக்கலாம் என்று புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவத்தினரே புத்தர் சிலைகளை அமைத்ததாக ஏற்றுக்கொண்ட அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, வடக்கில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திவிட்டு தமிழர் மீது குற்றம் சாட்டுவது நியாயமல்ல என்றும் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இழப்பீடுகள் பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடக்கில் புத்தர் சிலைகளை தேதப்படுத்தியது தெற்கு விஷமிகளே: வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு தனிப்பட்ட முறையில் நான் சென்ற போது, குறிப்பாக வவுனியா பிரதேசத்திற்கு விசேடமாக விஜயம் செய்தேன்.

குறிப்பிட்ட சில இடங்களில் புத்தர் சிலைகளுக்கு தார் பூசப்பட்டிருக்கிறது. இன்னும் சில இடங்களில் புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஆராய்ந்த போது எனக்கு தெரிய வந்தது என்னவென்றால், புத்தர் சிலைகள் அனைத்தும் தற்காலிகமாக இராணுவ குழு முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டபோது அப்பகுதியிலுள்ள பிக்குச் சபைகளின் பிக்குமார்களின் ஆலோசனையின்படி தற்காலிகமாக இராணுவ குழு முகாம்கள் அகற்றப்படும் என்பதால் நிரந்தரமான புத்தர் சிலைகளை அங்கு அமைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் தற்காலிக இராணுவ குழு முகாம்கள் அங்கிருந்து அகற்றிக் கொண்டுவந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்து புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைவிடப்பட்ட அந்த புத்தர் சிலைகளின் மீது யாராவது தார் பூசியிருக்கலாம், சில வேளைகளில் தென்னிலங்கையிலிருந்து சென்றவர்கள் யாராவது வேண்டுமென்றே தாரை பூசியிருக்கலாம்,

அவ்வாறு தார் பூசப்பட்ட புத்தர் சிலைகளின் புகைப்படங்களை எடுத்து தெற்கில் வந்து, இதோ வடக்கில் புத்தர் சிலைகளைக்கூட பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியாமலிருக்கிறது அங்கு தடங்கல்கள் காணப்படுகின்றன என்று கூறலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இதுவே இன்றைய நிலை” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
`