கொழும்பை முடக்கும் பாரிய முன்னெடுப்பு!

41shares

கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. நுகேகொடவில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து, மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர், டில்வின் சில்வா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி மக்களை பாதிப்படைய செய்யும் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படப் போவதாக அவர் கூறியுள்ளார்.

விலைச் சூத்திரம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் எரிபொருளின் விலை நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் அதன் விளைவாக, பேருந்து கட்டணங்களும் பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில், பொது மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க