கொழும்பு அரசியல் களத்தில் நேரடியாக குதித்துள்ள அமெரிக்கா! நெருக்கடியில் மஹிந்த - மைத்தி

363shares

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காண்பதற்காகஉடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றது.

அமெரிக்காவின் கொழும்புக்கான புதிய தூதுவர் அலைனா டெப்லிஸ் இன்றுமுற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்த அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையைவிடுத்திருக்கின்றார்.

இந்த சந்திப்பு தொடர்பில் கொழும்புக்கான புதிய தூதுவர் அலைனா டெப்லிஸ்சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் இடம்பெற்ற சந்திப்பை உறுதிப்படுத்தியிருப்பதுடன், நாடாளுமன்றத்தை உடினடியான கூட்டி ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசியல்குழப்பத்தை தீர்ப்பது தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்டமைப்புக்களை பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை என்றும்தெரிவித்துள்ள அமெரிக்கத் தூதுவர், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்றஉறுப்பினர்களுக்கு நாட்டின் பிரதமரை தெரிவு செய்வதற்கு அனுமதிக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.

சிறிலங்காவின் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவைஅகற்றிவிட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நீக்கியதையும், நாடாளுமன்றத்தைஒத்திவைத்ததையும் கடுமையாக கண்டித்துவரும் அமெரிக்கா, நாடாளுமன்றத்தைகூட்டுமாறு அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

எனினும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கோரிக்கைகைளைஉதாசீனப்படுத்திவரும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் நாடாளுமன்றசுற்றுவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது, வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படும் காலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டடுவிட்டதாகவும்சூளுரைத்திருந்தார்.

அதேவேளை அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் கடும்அழுத்தங்களை கொடுத்துவருகின்றநிலையிலும், நாடாளுமன்ற அமர்வுகளை நவம்பர் 14 ஆம் திகதியே கூட்டுவதற்கும்உத்தரவிட்டிருக்கின்றார்.

ஒக்டோபர் 26 ஆம்திகதி மஹிந்தவை புதிய பிரதமராக நியமித்த அரச தலைவர்மைத்ரி மறுநாளான ஒக்டோபர் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தை நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகியோரும்,அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருவதுடன்,நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் வலியுறுத்தி வருகின்றன.

சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது நாளைய தினமானநவம்பர் ஏழாம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதாக அரச தலைவர் இணக்கம் தெரிவித்ததாகசபாநாயகர் அறிவித்திருந்தார்.

எனினும் இந்த வாக்குறுதியையும் அரச தலைவர் மீறிவிட்டதாககுற்றம்சாட்டியிருந்த சபாநாயகர் கரு ஜயசூரிய ஏழாம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டப்போவதாககூறி நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே சபாநாயகர் கரு ஜயசூரியவை அமெரிக்கத் தூதுவர்சந்தித்து கலந்டதுரையாடியிருக்கின்றார். அதுவும் சபாநாயகர் அரச தலைவரின் உத்தரவைமீறி நாடாளுமன்றத்தை கூட்டினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றுமைத்ரி - மஹிந்த அணியினர் கடும்எச்சரிக்கை விடுத்துவரும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது.

இதையும் தவறாமல் படிங்க