மக்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக மாயாஜாலம் செய்யும் கோட்டா!

51shares

நாட்டு மக்களுக்கு நேரடியாக தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு அரசியல் நெருக்கடி நிலைமையொன்று உருவாகியதாகவும்,இதனையடுத்தே பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, மிக விரைவில் மக்கள் கருத்தை அறிவதற்கான வாய்ப்பொன்றை உருவாக்கித் தருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இதற்கிடையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து தானே நாட்டின் பிரதமர் எனத் தெரிவித்த அதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரியவும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு கடிதம் ஒன்றின் மூலம் இந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், இறுதியாக மக்களின் கருத்தை அறிந்து பார்ப்பதற்கு தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
`