இன்று மைத்திரி-மஹிந்த அவசர சந்திப்பு! தேர்தல் களத்தில் எந்தக் கட்சியில் மஹிந்த!

50shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலின் பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்கின்ற விதம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், போட்டியிடும் கட்சி மற்றும் இலட்சினை குறித்தும் இன்றைய தினம் ஆராயப்படவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் குறிப்பிடுகின்றன. எவ்வாறாயினும், தாமரை மொட்டு இலட்சினையின் கீழ் எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தாம் தயாராகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் அதனை எதிர்கொள்ளும் விதம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க
`