விக்கியிடம் இந்தியா கூறியது என்ன? அதிர்ச்சியில் கஜேந்திரன்!!

408shares

கஜேந்திரகுமார் பொண்ணம்பலத்துடன் கூட்டுச்சேரவேண்டாம் என்று சீ.வி. விக்கேஸ்வனிடம் இந்தியா கூறியதாக தெரியவருகின்றது.

விக்னேஸ்வரனே தன்னிடம் இதனைக் கூறியதாக தெரிவித்தார் கஜேந்திரக்குமார் பொண்ணம்பலம்.

விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவரை கஜேந்திரக்குமார் சந்தித்த போது, விக்னேஸ்வரன் நேரடியாக இதனைத் கஜேந்திரக்குமாரிடம் தெரிவித்தார்.

தன்னைச் சந்தித்த இந்தியத் தூதரக அதிகாரிகள், நீங்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் கூட்டுவைத்தால் சுலபமாக நீங்கள் முதலமைச்சர் ஆகிவிடுவீர்கள்; ஆனால் இந்தியா அதனை விரும்பவில்லை என்று தன்னிடம்; கூறியதாக விக்னேஸ்வரன் கஜேந்திரகுமாரிடம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ் நல்லூரில் இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் பொழுது, கஜேந்திரகுமார் இதனைத் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க