மஹிந்தவின் கடும் அறிவிப்பு; அரசியலில் வெடிக்கவுள்ளது புதிய சர்ச்சை!

1095shares

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்று குருநாகல் வட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச திட்டவடடமாக அறிவித்திருக்கின்றார்.

ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த முன்னணியிடமே அரசாங்கத்தை ஒப்படைக்க மைத்ரி இணக்கம்தெரிவித்துள்ளதால், மஹிந்தவின் பிரதமர் பதவி பறிபோகும் நிலைஉருவாகியிருக்கின்றது.

இந்த நிலையிலேயே தான் பிரதமர் பதவியை கேட்டுவாங்கவில்லை என்று கூறியுள்ள மஹிந்த ராஜபக்ச, மைத்ரியே தன்னை அழைத்து பிரதமர்பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கூறி அந்தப் பதவிக்கு தன்னை நியமித்ததாகவும், அதனால் அவரே வேண்டுமானால் தன்னை அந்தப் பதவியிலிருந்து நீக்கிக்கொள்ளட்டும்என்றும் தெரிவித்திருக்கின்றார்.

இந்தத் தகவலை நாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளஅரசியல் குழப்பத்திற்கு தீர்வொன்றை காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய தேசியமுன்னணியில் இருந்து மைத்ரி – மஹிந்த கூட்டணிக்கு தாவிய நாடாளுமன்ற உறுப்பினர்விஜேதாச ராஜபக்சவிடம் மஹிந்த தெரியப்படுத்தியிருக்கின்றார்.

தனது இந்த நிலைப்பாட்டை மைத்ரியிடம் கூறுமாறும்மஹிந்த அவரை வலியுறுத்தியிருக்கின்றார்.

இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகமாட்டார் என்று அவரது நெருங்கிய நண்பரான சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்எஸ்.பி.திஸாநாயக்கவும் தெரிவித்திருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி 19 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச்சட்டத்திற்கு அமைய பிரதமர் சுயமாக பதவி விலகாத நிலையில் அவரை பதவி நீக்கம் செய்யமுடியாது என்றும் எஸ்.பி குறிப்பிட்டிருக்கின்றார். இதனையே ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியகட்சிகளும் ஒக்டோபர் 26 ஆம் திகதி அதிரடியாக பிரதமர் பதவிக்கு மஹிந்த நியமிக்கப்பட்டபோதும் கூறியிருந்தன.

இதற்கமையவே ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர்கள் மஹிந்தவின் நியமனம் சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறு கோரிமேன்முறையீட்டு நீதிமன்றிலும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு டிசெம்பர் ஐந்தாம் திகதியான புதன் கிழமைவிசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் மைத்ரி – மஹிந்த இடையே மீண்டும்சமரசத்தை ஏற்படுத்தி கூட்டணி அரசாங்கமொன்றை அமைக்கும் அளவிற்கு இருவரிடையேயும்நிலவிய முரண்பாடுகளை கலைந்து நெருக்கத்தை ஏற்படுத்தியவராக கருதப்படும் சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க மஹிந்த பிரதமர் பதவியிலிருந்துவிலகப் போவதில்லை என்று கண்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டுஉரையாற்றிய போது பகிரங்கப்படுத்தியிருந்தார்.

மஹிந்தவுடன் மிக நெருக்கமான உறவைப்பேணும்அரசியல்வாதியான எஸ்.பி யின் இந்தக் கூற்றுக்கள் மஹிந்த ராஜபக்சவின் முழுமையானஅணுசரணையுடன், தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் என்று கொழும்பு அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் கொழும்பு அரசியலில் ஏற்படுத்தியகுழப்பத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் சிறிலங்கா ஜனாதிபதி தொடர்ந்தும் நெருக்கடியைசந்திக்க நேரிடும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதுடன், இந்தப் பிரச்சனை இனிவரும் நாட்களில்தான் பூதாகரமாகலாம் என்றும் அச்சமும் வெளியிட்டிருக்கின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க