முல்லை ஒதியமலை கிராமம் தமிழர்களிடமிருந்து பறிபோகும் ஆபத்தில்: மீளக்குடியமருமாறு மக்களுக்கு அழைப்பு

51shares

முல்லைத்தீவு– ஒதியமலை கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து அங்கிருந்து வெளியேறிநாட்டில் பல இடங்களில் தஞ்சமடைந்துள்ள மக்கள் இன்னமும்முழமையாக மீளக்குயேறாததால், எல்லைக்கிராமமான ஒதியமலை கிராமம் தமிழ்மக்களின் கைகளில் இருந்து பறிபோகும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக அச்சம்தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம்காரணமாக பல்வேறு கொடூரங்களுக்கு முகம்கொடுத்த நிலையில் ஒதியமலை கிராமத்தை விட்டு வெளியேறிபல்வேறு பகுதிகளில் குடியமர்ந்துள்ள ஒதியமலையை பூர்வீகமாக கொண்ட மக்கள் தமது கிராமத்தில் மீண்டும் குடியேறி எல்லைக் கிராமமான ஒதியமலையை பாதுகாக்க வேண்டும் என்று வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒதியமலைகிராமத்தில் 34 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட 32 பொதுமக்களின்நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி டிசெம்பர் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைதிறந்து வைக்கப்பட்டது. எனினும் இந்த நினைவுத்தூபியை நிர்மாணிக்க முற்பட்டபோது அதனைத்தடுக்க படைப் புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களைவிடுத்து வந்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்தார்.

எனினும் பலதடைகளுக்கு மத்தியில் புலனாய்வாளர்களின் எதிர்ப்பையும் மீறி படுகொலை செய்யப்பட்டமக்களுக்கு நினைவுத்தூபி அமைக்கப்பட்டு இன்று அதனை திறந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான ஒதியமலையில் 1984 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா இராணுவத்தால் சுட்டுகொல்லப்பட்ட 32 பொதுமக்களில் 34 ஆம் ஆண்டுநினைவேந்தல் நிகழ்வு டிசெம்பர் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில் இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவின் 2 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் படுகொலை செய்யப்பட்ட 32 பொதுமக்களின்நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியும், ஒதியமலைபிள்ளையார் ஆலய வளாகத்தில் 32 பொதுமக்களின்நினைவாக அமைக்கப்பட்ட அன்னதான மண்டப திறப்புவிழாவும் இடம்பெற்றது.

இதையும் தவறாமல் படிங்க