225 எம்.பீ க்கள் கையெழுத்திட்டாலும் ரணிலுக்கு பிரதமர் பதவி இல்லை: மைத்ரியின் அதிரடி

210shares

ஐக்கிய தேசியமுன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லைஎன்பதை சிறிலங்கா அரச தலைவரான மைத்ரிபால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாகஅறிவித்திருக்கின்றார்.

குறிப்பாகநாடாளுமன்றில் அங்கம் வகிக்கம் 225 உறுப்பினர்களும் கையெழுத்திட்டு கொடுத்தாலும்ரணிலை மாத்திரம் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்ற தனது உறுதியான முடிவை டிசெம்பர்3 ஆம் திகதி இரவு சந்தித்த ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடத்தில் மைத்ரி திட்டவட்டமாகஅறிவித்திருக்கின்றார்.

இதனால் மேன்முறையீட்டுநீதிமன்றம் மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவை பதவியில் இருக்க சடட் அனுமதி இல்லைஎன்ற கூறி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தும் ஒக்டோபர் 26 ஆம் திகதிஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பத்திற்கு தீர்வு இப்போதைக்கு இல்லை என்பதுஉறுதியாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிகத் தகவல்களுடன் எமது கொழும்பு செய்தியாளர் சிரியான் சுஜித்....

இதையும் தவறாமல் படிங்க
`