மதம், காலாசரம் தெரியாது என்ற ரணில், மைதிரிக்கு “ஆக்ரோஷ சூத்திரத்தில்” பதில்

228shares

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டில் வைத்து அந்தக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க மீது சுமத்தியகுற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணிலுக்கு பௌத்த மதம்தொடர்பிலோ, பண்பாடுகள் தொடர்பிலோ, கலாசாரம்தொடர்பிலோ எந்தவொரு பற்றும் புரிதலும் இல்லை என்று மைத்ரி குற்றம்சாட்டியிருந்தநிலையில் பௌத்த தர்ம ஒழுக்க நெறிமுறை நூலையும், ஆக்ரோஷசூத்திரத்தையும் முன்னுதாரணமாக வைத்து ரணில் பதிலளித்துள்ளார்.

அதற்கமைய புத்த பெருமானின் போதனைக்கு அமைய மைத்ரி முன்வைத்தகுற்றச்சாட்டுக்களை தான் ஏற்றுக்கொள்ளாததால் அவை அனைத்தும் அவரையே சாரும் என்றும்ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடொன்றகொழும்பிலுள்ள சுகததாச உள்ளக அரங்கில் நேற்றை தினம் கூட்டப்பட்டிருந்தது. இதில்கலந்துகொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ரணில்விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் நீக்கியதற்கும், மீண்டும்அவரை பிரதமராக நியமிக்காது இருப்பதற்குமான காரணங்களை தெளிவுபடுத்தியிருந்தார்.

இதற்கான காரணங்களையும்சுதந்திரக் கட்சியினர் மத்தியில் மைத்ரி தெளிலுவுபடுத்தியதுடன், ரணில்சிறிலங்காவிற்கு உகந்த தலைவர் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

“ இந்த அரசியல் குழப்பத்திற்குமத்தியிலும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ள இந்த சமூகத்தில், சட்டத்தையும்- ஒழுக்கத்தையும் முழுமையாக மதித்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியல் சாசனத்தைபாதுகாக்கும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றோம். நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களே இருக்கின்றார்கள். இந்த 225 உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கொடுத்தாலும் கூடநான் மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் அமர்த்த மாட்டேன் என்பதைமீண்டும் மிகத் தெளிவாக கூறிக் கொள்கின்றேன்.

அதற்குக் காரணம் என்ன? அவருக்கும்எனக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினையோ எம் இருவருக்கும் இடையிலான நிறங்கள்பற்றிய பிரச்சினையோ அல்ல. நான் அப்படி செய்வதற்கான காரணம் அவர் இந்த நாட்டுக்குப்பொருந்தாத அரசியல்வாதி என்பதினாலேயே ஆகும். அவரது அரசியல் கொள்கை இந்த நாட்டுக்குஉகந்ததல்ல. அவரது சிந்தனையும் இந்த நாட்டுக்கு உகந்ததல்ல. தேசிய உடமைகள், எமது பாரம்பரியம், எமது பழக்க வழக்கங்கள், எமது பண்பாடு, எமது பௌத்த தரம்ம் உள்ளிட்ட ஏனைய மதக்கோட்பாடுகள் எவற்றையும் இந்த மனிதர் பின்பற்றுவதில்லை" என்றார் மைத்ர்.

மைத்ரியின்இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இன்றைய தினம் ஜனநாயகத்திற்கான தொழில்சார் நிபுணர்கள்ஏற்பாடுசெய்திருந்த கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசியமுன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மைத்ரிக்கு கடும் தொணியில் பதிலளித்தார்.

“இதோ தாச்சி கதைக்கின்றது. நாம் அனைவரும் இணைந்து அப்பமொன்றை சுட்டோம். நாம்எதிர்பார்த்தது ஜனநாயகம், ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள்,அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனமகாநாயக்கத் தேரரரு வேலையை விகாராதிபதி செய்ய முற்படுகின்றாராம். இதுமகாநாயக்கரின் பிரச்சனையோ, விகாரதிபதியின் பிரச்சனையோ அல்ல.இது ஒழுக்கநெறி தொடர்பான பிரச்சனை.

அதாவது ஒழுக்கத்துடன் செயற்படுவதா இல்லையாஎன்பது தொடர்பான பிரச்சனையே இங்கு இருக்கின்றது. நாம் ஜனாதிபதியைநாடாளுமன்றத்திற்குள் அடக்கினோம். அதனாலேயே ஒழுக்க நெறி கூலை கிழித்தெறிந்துசெயற்படுதுதான் எம்முன்னால்இ ருக்குமு் பிரச்சனை. அரசியல் சாசனத்தை பாதுகாக்கவேண்டும் என்பதே எமது பிரச்சனை. அரசியல் சாசனத்திற்கு அமைய பெரும்பான்மைஉள்ளவரிடம் அரசாங்கத்தை ஒப்படையுங்கள். நாடாளுமன்றில் மூன்றில் இரண்டுபெரும்பான்மையினரின் ஆதரவு இருந்தால் பொதுத் தேர்தலை நடத்தலாம். 225உறுப்பினர்களும் கையெழுத்திட்டாலும் என்னை பிரதமராக்க மாட்டேன் என்று மைத்ர நேற்றுகூறியுள்ளார். அது எனது பிரச்சனையல்ல அது ஜனாதிபதி தொடர்பான பிரச்சனை.

அதேவேளைசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் என் மீது பல குற்றச்சாட்டுக்களைமுன்வைத்தார். அந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நான் நிராகரிக்கின்றேன். எனதுகலாசாரத்திற்கு அமைய நான் இதற்கு பதிலளிக்கின்றேன். சங்யுக்த ஆக்ரோஷசூத்திரத்திற்கு அமைய ஒரு சந்நியாசி ஒருவர் புத்த பெருமானை கடுமையாக திட்டித்தீர்த்தார். அவற்றுக்கு செவிமடுத்த புத்த பெருமான் இறுதியில் சந்நியாசியே உமக்குநண்பர்கள் இருக்கினறனரா?.

அவர்கள் உமது இல்லத்திற்கு வரும்போது நீர் அவர்களுக்கு வழங்கு உணவை அவர்கள் உண்ணாது இருந்தால் அந்த உணவு யாருக்குசொந்தம் என்று வினவினார். அதற்கு பதிலளித்த சந்நியாசி அது எனக்கே சொந்தமானதுஎன்றார். அதன்போது புத்த பெருமான் சந்நியாசியே என்னை திட்டிய அனைத்தும் உம்மையேசாரும் என்று கூறினார்” என்றார் ரணில் விக்கிரமசிங்க.

இதையும் தவறாமல் படிங்க