ரணிலை மீண்டும் விளாசித்தள்ளிய சிறிலங்கா ஜனாதிபதி!

95shares

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனநாயகத்தை நிலைநாட்டாத ரணில்விக்கிரமசிங்க எம்மை ஜனநாயகத்தை மதித்து செயற்படுமாறு வலியுறுத்துவது வேடிக்கையாகஇருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

அரச அலுவலகங்களின் தலைமை அதிகாரிகளை இன்றைய தினம் ஜனாதிபதிசெயலகத்திற்கு அழைத்து, எந்தவொரு காரணத்திற்காகவும் அபிவிருத்தி பணிகளும்,பொதுமக்களுக்கான சேவைகளும் தடைப்படக் கூடாது என உத்தரவிட்டநிலையிலேயே சிறிலங்கா ஜனாதிபதி தனது அ ரசியல் நிலைப்பாட்டையும் அரச அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கின்றார்.

டிசெம்பர் 5 ஆம் திகதியான இன்றைய தினம் முற்பகல் ஜனாதிபதிசெயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த அரச திணைக்களகங்கள், கூட்டுத்தாபனங்கள்மற்றும் அலுவலகங்களின் தலைமை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய சிறிலங்கா ஜனாதிபதி,நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பங்களை பிரச்சினையாகக் கருதாதுபொதுமக்களுக்கான சேவைகளையும் அபிவிருத்தி செயற்திட்டங்களையும் தொடர்ச்சியாகமுன்னெடுத்துச் செல்ல வேண்டுமென பணித்துள்ளார்.

மக்களின் நலன்கருதி தனது வழிகாட்டலில் ஜனாதிபதி செயலகத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சகல விசேட செயற்திட்டங்களும் 2019 ஆம் ஆண்டில் புதியஉத்வேகத்துடனும் வலுவுடனும் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறும்சிறிலங்கா ஜனாதிபதி அரச தலைமை அதிகாரிகளை பணித்திருக்கின்றார்.

வறுமையை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளகிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்பாடுகளையும் எதிர்வரும் வருடம் வலுவுடன்நடைமுறைப்படுத்த பணிப்புரை வழங்கியுள்ள சிறிலங்கா ஜனாதிபதி, மாவட்டமட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள கிராமசக்தி ஒருங்கிணைப்பாளர்கள் தமது கடமைகளைஉரியவாறு நிறைவேற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்திசெயற்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.இதன்போது வடக்கு - கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காகநியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி தனது செயற்பாடுகளை வெற்றிகரமாகமுன்னெடுத்துச் செல்வதாகவும், குறுகிய காலத்திற்குள் அடைந்துள்ள அதன்முன்னேற்றம் தொடர்பிலும் மைத்ரிபால சிறிசேன தனது மகிழ்ச்சியைவெளிப்படுத்தியிருக்கின்றார்.

கடந்த மூன்றரை வருட காலமாக உரியவாறு கவனம் செலுத்தப்படாதவடக்கு - கிழக்கு மக்களின் அபிவிருத்தி தேவைகளை நிறைவேற்றுவதற்கு தன்னால்நியமிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணிகுறிப்பிடத்தக்க வகையில் செயற்பாடுகளை நிறைவேற்றி வருவதாகவும் ஜனாதிபதி பெருமிதம்வெளியிட்டிருக்கின்றார்.

இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் குழப்பங்கள் தொடர்பிலும்சிறிலங்கா ஜனாதிபதி கருத்துக்களை பதிவுசெய்தார்.

“ஐக்கிய தேசியக்கட்சிக்கு என்ன நடந்திருக்கின்றது என்றால், ரணில்விக்கிரமசிங்க சட்டம் குறித்து கதைக்கின்றார். சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று எமக்கு அறிவுரை கூறுகின்றார். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியேசிறிலங்காவில் ஜயநாயகம் இல்லாத ஒரே இடமாகும்.

25 ஆண்டுகளாக ஐக்கியதேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருந்து வருகின்ற போதிலும் 2010 ஆம்ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு அந்தக் கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்நிறுத்தப்படவில்லை. அதனால் வெளியில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்நிறுத்தப்பட்டார்.

2015 ஆம் ஆண்டிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்க ஜனாதிபதி வேட்பாளர்ஒருவர் இருக்கவில்லை. அதனால்தான் பொதுவேட்பாளராக நான் நின்றேன். அதனால் ஐக்கியதேசியக் கட்சிக்குள் ஜனநாயகத்தை நிலைநாடட முடியாத ரணில் விக்கிரமசிங்கவால், நாட்டில்ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு எந்தவொருதகுதியும் இல்லை என்பது தான் எனதுநிலைப்பாடு. முதலில் ரணில் தனது கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும்" என்றும் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க