ஐ.தே.மு வுடன் ஒப்பந்தம் இல்லையேல் ரொலோ ஆதரவு வழங்காது: சிவாஜிலிங்கம் திட்டவட்டம்

27shares

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலானஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டினை தமிழ் தேசியகூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்காளிக் கட்சிகளும் இணைந்து எடுத்த ஒருமுடிவல்ல என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் முதல்வர்எம்.கே.சிவாஜிலிங்கம் அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டிருக்கின்றார்.

கூட்டமைப்பின் தீர்மானங்களை எடுப்பதற்காகஅமைக்கப்பட்டுள்ள பங்காளிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினை கூட்டமாலேயேஇந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள சிவாஜிலிங்கம், ஐக்கியதேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனைகளைவிதிக்க தவறுமாக இருந்தால் ரெலோ வின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இருவரும் ஐக்கிய தேசியமுன்னணிக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடகஅமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரெலோவின் முதல்வர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தத்தகவல்களை தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
`