மைத்ரி – மஹிந்த கூட்டணியை முடக்க ரணில் தரப்பின் மற்றுமொரு அதிரடி!

106shares

சிறிலங்காவின் பிரதமர் பதவி வகிப்பதற்கு மஹிந்த ராஜபக்சவிற்கு நீதிமன்றம்தடை விதித்துள்ளதால் மஹிந்தவின் செயலாளர் உட்பட ஐந்து உயர் அரச அதிகாரிகளைநாடாளுமன்றின் முன் நிறுத்தி விசாரணை நடத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசிய முன்னணிபிரேரணையொன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய மஹிந்தவின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் ஐவரையும்நாடாளுமன்ற வரப்பிரசாத குழு, நிதிக் குழு மற்றும் பொதுக் கணக்காய்வுக் குழு ஆகியவற்றின்முன்னிலையில் நிறுத்தி விசாரணை செய்யுமாறு வலியுறுத்தும் பிரேரணையின் பிரதிகள் சபாநாயகர்மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரிடம் கையளித்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தரான ஜாதிக்கஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நிதி அமைச்சினதும், பிரதமர் அலுவலகத்தினதும் சில அதிகாரிகளும், அதேபோல் சில அமைச்சுக்களின் செயலாளர்களும் நிதியுடன் தொடர்புடையநடவடிக்கைகளின் போது நாடாளுமன்றத்தின் உத்தரவுகளை மீறி செயற்படுவதாக தமக்குதெரியவந்துள்ளதை அடுத்தே இந்த பிரேரணையை நாடாளுமன்றில் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாகவும்சம்பிக்க கூறினார்.

சட்டவிரோத பிரதமருக்கான செயலாளராக நியமிக்கப்பட்ட எஸ்.அமரசேக, நிதி அமைச்சின் சட்டவிரோத செயலாளராக செயற்பட்ட எஸ்.ஆர்.ஆடிகல, வர்த்தக வாணிபத்துறை மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சின் செயலாளராக கடமையாற்றியபேர்னாட் வசந்த பெரேரா, வீடமைப்பு – சமூகநலன்புரி சேவைகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட உபாலி மாரசிங்க, சர்வதேச வர்த்த மற்றும் முதலீட்டு அமைச்சின் செயலாளராக செயற்பட்ட எஸ்.வீ.கொடிக்காரஆகியோரையே நாடாளுமன்ற குழுக்களின் முன்னிலையில் நிறுத்தி விசாரணை நடத்தமாறு கோரிக்கைவிடுத்துள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, லக்ஸ்மன் கிரியெல்ல, அகில விராஜ் காரியவசம், அருஜுண ரணதுங்க ஆகியோர் இந்தப் பிரேரணையில் கையெழுத்திட்டுஒப்படைத்திருக்கின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க