சிங்கள இனத்தை தலைமேல் சுமந்து செயற்படுவதாக சம்பந்தன் முன்னிலையில் சூளுரைத்த சிறிலங்கா ஜனாதிபதி

256shares

சிங்கள இனம், மதம், மொழி ஆகியவற்றைதலைமேல் சுமந்து செயற்படுவதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சிறிலங்காவின்தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான படையினர்முன்னிலையில் சூளுரைத்திருக்கின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயன் சம்பந்தன்உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர் காலிமுகத்திடலில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் 71 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில்கலந்துகொண்டிருந்தனர்.

இவர்ள் முன்னிலையில் உரையாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி, சிங்களபண்டிதரான குமாரதுங்க முனிதாஸவின் கவிதையொன்றை கோடிகாட்டி சிங்களத்திற்காக தன்னைஅர்ப்பணித்து செயற்படுவதாக வாக்குறுதி வழங்கியிருக்கின்றார்.

சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர தினத்தின் தேசிய நிகழ்வுகள்தலைநகர் கொழும்பிலுள்ள காலிமுகத் திடலில் இடம்பெற்றன.

மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹீம் முகம்மட் சோலி இந்தநிகழ்விற்கு சிறப்பு அதீதியாக அழைக்கப்பட்டிருந்தார். இதற்கமைய பிரதம அதீதியாககலந்துகொண்ட சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சிறிலங்காவின் தேசியக் கொடியைஏற்றிவைத்ததை அடுத்து தனது தேசிய தின உரையை ஆற்றினார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச, அமைச்சர்கள், நாடாளுமன்றஉறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள், முப்படை தளபதிகள் உட்பட உயர் நிலைஅதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் உரையாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி, சிறிலங்கா ஒரு சிங்கள தேசம் என்று அடித்துக் கூறியதுடன், அதன் அடிப்படையிலேயே நாடு கட்டியெழுப்பப்படும் என்றும் சூளுரைத்தார்.

“ஒரு நாளும் பிளவுபடாத ஒரே கொடியின் கீழ்இயங்கும் ஒரே நாடாக நாம் அனைவரும் சமமாக வாழக்கூடிய பின்புலத்தை உருவாக்கவேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். முப்பது வருட கால யுத்தத்தில்உயிர்நீத்த இராணுவத்தினரையும், அங்கவீனமுற்றோரையும் அவர்களதுகுடும்பத்தினரையும், அனைத்து இராணுவ வீரர்களையும் நான்மீண்டும் மீண்டும் நினைவுகூருகின்றேன்.

ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றிய இரண்டுவீரர்கள் கடந்த வாரம் கடமையில் இருந்தபோது உயிர்நீத்தனர். அவர்களது மறைவுக்காகஎனது ஆழ்ந்த வருத்தத்தையும் இந்த வேளையில் தெரிவித்துக்கொள்கின்றேன். எனது தேசம்சிங்கள தேசம். எனது மதம் சிங்கள மதம். எனது மொழி சிங்கள மொழியாகும். இதனை நான்தலைமேல் சுமப்பேன். இதுவே நாம் கட்டியெழுப்ப வேண்டிய எதிர்கால தொலைநோக்கின் சாரமாகஇருக்க வேண்டும் என நான் நம்புகிறேன்” என்றும் தெரிவித்தார் மைத்ரிபால சிறிசேன.

சிறிலங்கா என்றும் இல்லாத அளவிற்கு வெளிநாடுகளின்அத்துமீறிய தலையீடுகளுக்கு தற்போது முகம்கொடுத்துள்ளதாகவும் சிறிலங்கா ஜனாதிபதிகுறிப்பிட்டார்.

அதேவேளை நாட்டில் கடந்தகாலங்களில் ஆட்சியில் இருந்தஅரசாங்கங்களும், தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கமும் நாட்டின் பல தசாப்தகாலமாகஅரசியல் தீர்வொன்றை காண்பதிலேயே அதிக கரிசணையை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டசிறிலங்கா ஜனாதிபதி இதனால் நாடும் நாட்டுமக்களும் பல தசாப்தங்களாக எதிர்பார்த்த பொருளாதார அபிவிருத்தி குறித்து கவனம்செலுத்தத் தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

“பல தசாப்தங்களாக இனமோதலுக்கு தீர்வுகாண்பதற்காகவே அனைத்து அரசாங்கங்களும் காலத்தை செலவிட்டன. அதற்கானமுக்கியத்துவத்தை வழங்கின. தீர்வுகளை தேடின. அதனால் நாட்டின் பொருளாதாரதீர்வுக்கான நடவடிக்கைகள் பிற்போடப்பட்டன.

அனைவரும் இனமோதலுக்கு முக்கியத்துவம்அளித்தாலும் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவமளித்து கலந்துரையாடல்களைமேற்கொள்வதற்கு எவரும் முயற்சி செய்யவில்லை. கடன் சுமை,வேலையின்மை ஆகிய இரண்டு பிரச்சினைகளுக்கும் இன்று தீர்வின்றி தவிக்கின்றோம். உலகநாடுகளில் 6000மொழிகளுக்கும் மேல் பேசப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் எமதுநாட்டில் மூன்றே மூன்று மொழிகள் மட்டுமே பேசப்பட்டு வருகின்றன. நாம் அனைவரும் ஒரேதேசத்தில் வாழும் மனிதர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது” என்றும் கூறினார் சிறிலங்கா ஜனாதிபதி.

சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திரத் தினத்தை கரி நாளாகவும், துக்கதினமாகவும் பிரகடனப்படுத்தி தமிழர்கள் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர்தேசங்களிலும் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், தனதுஆட்சியின் கீழ் தமிழ் மக்கள் என்றும் இல்லாத அளவிற்கு சுதந்திரமாக வாழ்ந்துவருவதாக சிறிலங்கா ஜனாதிபதி பெருமிதம் வெளியிட்டார்.

( மைத்ரிபால சிறிசேன – “ வடக்கு மக்கள் முப்பதைந்துஆண்டுகளுக்கு பின்னர் பெற்ற சுதந்திரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளே மிகவும்சுதந்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது எனது நம்பிக்கையாகும். தேசிய ஒற்றுமைமற்றும் நல்லிணக்கத்தை கேலிப்பொருளாக ஆக்கிவிடாமல் அவற்றின் பாரதூரமான நிலையை நாம்கண்டறிய வேண்டும். செந்தணல் மேல் இருக்கும் சாம்பலில் நாம் நின்றுகொண்டிருப்பதைமறந்துவிடக் கூடாது. நாம் மாகாண சபை முறைமையை நிறுவி 30 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. வருடாந்தவரவு செலவு திட்டத்தின் மூலமாக மாகாண சபைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியில்அபிவிருத்திக்கும் முதலீட்டுக்கும் 15 சதவீதமேஒதுக்கப்பட்டிருக்கின்றது. மீண்டுவரும் செலவுஇ பராமரிப்புக்கான செலவு 85 வீதமாகும். இந்த நிலையை நாம் மாற்றிஅமைக்க வேண்டும். சுமார் ஒன்றரை வருட காலமாக மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருப்பதுஜனநாயகத்திற்கான சவாலாகவே நான் கருதுகின்றேன். இவை தொடர்பில் பேசுவதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் இன்று முன்வருவதில்லை”.)

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கம் கூட்டணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான யோசனையொன்றைநாடாளுமன்றில் முன்வைத்துள்ளது.

இந்த யோசனை நாடாளுமன்றில் விரைவில் ஆராயப்படவுள்ள நிலையில், இதற்குபிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டிருந்த தேசிய சுதந்திர தின நிகழ்வில்கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய சிறிலங்கா ஜனாதிபதி, அமைச்சரவையைஅதிகரித்துக்கொள்வதற்காக தேசிய அரசாங்கம் அல்லது கூட்டணி அரசாங்கமொன்றை அமைக்கமுற்படுவது வெட்கக் கேடானது என்று குறிப்பிட்டார்.

“தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது பற்றிய விடயத்தைநான் ஊடகங்கள் மூலம் அறிந்தேன். ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வைத்துக்கொண்டு தேசியஅரசாங்கத்தை அமைப்பது எவ்வளவு தூரம் பண்பாடானவொன்று என்பது பற்றி சிந்திக்கவேண்டும். அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் அமைச்சர்களுக்கான வசதிகளைஅதிகரிப்பதும் மட்டுமே அதன் நோக்கமாகும் என நான் நினைக்கிறேன்.

தேசிய அரசாங்கம்என்ற கருத்து ஊடகங்களின் வாயிலாக நான் அறிந்த வகையில் இருக்கும் என்றால் நான்அதற்கு முற்றிலும் எதிரானவன் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். இன்று தனிக்கட்சிஅரசாங்கம் ஒன்றின் மூலம் அமைச்சரவையின் எண்ணிக்கை 25 ஆக வரையறுக்கப்படுமானால் அது மக்களின்பிரார்த்தனை என்றே நான் நம்புகிறேன். நாடு உங்களுக்கு செய்ய வேண்டிய பொறுப்புக்கள்மற்றும் கடமைகள் பற்றி கேள்வி கேட்பதற்கு முன்பு உங்களால் நாட்டுக்கு செய்யவேண்டிய கடமைகள், பொறுப்புக்கள் பற்றிய உறுதிப்பாட்டைகொண்டிருக்க வேண்டும்.

எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றே பெரும்பாலானவர்கள்கேட்கிறார்கள். எனினும் நாட்டுக்காக செய்ய வேண்டிய பொறுப்புகள் மற்றும் கடமைகளைசெய்வது அவசியமானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 70 வருட காலமாக இலங்கை கடந்து வந்தபயணத்தில் நாம் அடைய வேண்டிய பேண்தகு பெளதீக மற்றும் மானிட அபிவிருத்தியை அடைந்துகொள்ளவில்லை என்பதை இப்போது உணர்கிறோம்” என்றார் மைத்ரிபால சிறிசேன.

இதனையடுத்து சிறிலங்கா இராணுவம் உட்பட முப்படையினரதும், பொலிசாரினதும்பிரமாண்டமான இராணு அணிவகுப்பு இடம்பெற்றது. இந்த அணிவகுப்பில் சிறிலங்காஇராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினர், பொலிசார் மற்றும்சிவில் பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த 7504 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

இவர்களது அணிவகுப்பில் சிறிலங்காவின் படைப் பலத்தைபறைசாற்றும் ஆயுதத் தளபாடங்களும் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தன.

அதேவேளை வான் படையினர் தமது வான் படைப் பலத்தை பறைசாற்றும்வகையில் யுத்த விமானங்கள் உள்ளிட்ட போர் விமானங்களின் சாகசங்களும் இடம்பெற்றன.

சிறிலங்கா கடற்படையினர் காலிமுகத்திடலை அண்மித்த கடலில்தமது யுத்தக் கப்பல்கள் உள்ளிட்ட போர்க் கலங்களைக் கொண்டு விசேட அணிவகுப்பொன்றைநடத்தி, கடற்படையினரின் பலத்தை பறைசாற்றினர்.

இராணுவ அணிவகுப்பிற்கு பின்னர் சிறிலங்காவின் கலை, கலாசாரத்தைவெளிப்படத்தும் வகையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் அணிவகுப்பும்இடம்பெற்றன.

இதேவேளை தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டுகொழும்பின் காலி முகத்திடல் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பும்பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க