தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சலுகை அரசியலை விடுத்து உரிமை தொடர்பில் என்னுடன் பேசவேண்டும்! ஐ.பி.சி தமிழின் கருத்துக்கள் மோதும் சக்கரவியூகம்

28shares

ஸ்ரீலங்காவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக இரண்டு கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன. அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கோட்டாபாய ராஜபக்ஷவை வேட்பாராகவும் மற்றும் ஜே.வி.பி அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை வேட்பாளராகவும் அறிவித்திருக்கின்றன.

அந்த வகையில், கூட்டணிக் கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி இதுவரை தமது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இது வரை அறிவிக்காத நிலையில், யாரை வேட்பாளாக நியமிப்பது என்பதிலும் இழுபறி நிலை காணப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் எமது ஐ.பி.சி தமிழ் கலையகத்திற்கு சக்கரவியூகம் நிகழ்ச்சிக்காக வருகைதந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தேர்தல் தொடர்பிலும் தேர்தலின் போது யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான தங்கள் கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில், தமது கட்சியின் தலைவர் கூறுவதைப் போன்று நாங்கள் எமது நிலைப்பாட்டை இப்போது எடுக்கவில்லை கட்சிகள் இப்போது தங்கள் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவிக்கட்டும் அத்துடன் அந்த வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் வேலைத்திட்டம், மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகள் என்ன என்பதையும் அறிவிக்கட்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வேட்பாளர்களை களமிறக்கும் கட்சிகளின் அரசியல் தீர்வுத் திட்டம் என்பதையும் அறிவிக்க வேண்டும் அதன் பின்னர் நாம் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம். சில தினங்களுக்கு முன்னர் கோட்டாபாய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சலுகை அரசியலை விட்டு உரிமை தொடர்பில் என்னுடன் பேச வேண்டும் எனத் தெரிவித்திருந்தார் எனவும் கூறியிருந்தார்.

அந்த வகையில் கோட்டாபாய ராஜபக்ஷ எம்முடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால் நாம் அவருடனும் பேச தயாராகவே உள்ளோம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் நாம் யாருக்கு ஆதரவு வழங்குகிறோம் என்பது அல்ல விடயம். எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் அணியினர் தமிழ் தேசிய பிரச்சினை தொடர்பில் எவ்வாறான நிலைப்பட்டில் இருக்கின்றார்கள் என்பது தொடர்பில் சரியான ஒரு நிலைப்பாட்டை அவர்களே எடுப்பதற்கான அழுத்தங்களை நாங்கள் அவர்களுக்கு கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கலந்துரையாடல் தொடர்பான விரிவான விடயங்களை அறிந்து கொள்ள ஐ.பி.சி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியுடன் இணைந்து கொள்ளுங்கள். வரும் ஞாயிற்றுக் கிழமை ஐரோப்பிய நேரம் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை