இதுவே அவர்களது திட்டம்...? தமிழ் மக்களே உஷார்!

169shares

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிபீடம் ஏற்றி சிறுபான்மையின சமூகங்களை அச்சுறுத்தி அடிமைப்படுத்தி வைத்திருக்க சிங்கள பேரினவாதிகள் திட்டமட்டுள்ளதாக நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன எச்சரித்துள்ளார்.

தமது இந்த இலக்கை அடைவதற்காகவே நாட்டின் தேசிய பாதுகாப்பு என்றுமில்லாத அளவிற்கு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக பிரசாரம் செய்து வருவதாகவும் கூறும் கலாநிதி விக்கிரமபாகு, சிங்கள

பேரினவாதிகள் திட்டமிடுவது போல் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிபீடம் ஏறினால் நாட்டில் சர்வாதிகார ஆட்சியே ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.

“ சிங்கள பேரினவாத தரப்புக்கள் சிறுபான்மையின சமூகங்களை தொடர்ந்தும் அடிமைப்படுத்தி வைத்திருக்க முனைவதால் எமது நாட்டில் பாரிய பிரச்சனையொன்று இருந்து வருகின்றது. இந்த சிங்கள பேரினவாதிகளின் நடவடிக்கைகள் காரணமாகவே கடந்த காலங்களில் நாம் மூன்று தசாப்தகால யுத்தத்திற்கும் முகம்கொடுத்திருந்தோம்.

தமிழ் விடுதலைப் போராளிகள் ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு சர்வதேச தரப்போ, பிராந்திய சக்திகளோ காரணமாக இருக்கவில்லை. எமது நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களை அதாவது இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களை பின்பற்றும் சமூகங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதிகள் கட்டவிழ்த்துவிட்ட கொடூரங்கள் காரணமாகவே ஆயுதப் போராட்டங்கள் வெடித்தன.

தமது உரிமைகளுக்காகவே அவர்கள் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். அந்த போராட்டங்கள் மற்றுமொரு நாட்டினால் தொடுக்கப்பட்ட யுத்தங்கள் அல்ல. இந்த நாட்டிற்குள் வாழும் பாசிசவாதிகளான கோட்டாபய போன்ற சிங்கள பேரினவாத கொலைகாரர்கள் கட்டவிழ்த்துவிட்ட கொடூரங்கள் காரணமாகவே யுத்தம் இடம்பெற்றது.

இந்த நிலையில் மீண்டும் கோட்டாபய ராஜபக்சவை நாட்டின் ஜனாதிபதி பதவியில் அமர்த்தி, அவர் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கூறிவரும் தரப்பினர், எமது நாட்டில் வாழும் சிறுபான்மையின சமூகங்களை அச்சுறுத்தி, அவர்களை அடிமைப்படுத்தி இந்த நாட்டை ஒற்றையாட்சிக்குள் சர்வாதிகார ஆட்சிக்குள் வைத்திருக்கவே திட்டமிட்டுள்ளனர்.

எனினும் இவ்வாறான கடும்போக்குவாத சர்வாதிகார ஆட்சியின் கீழ் எந்தளவிற்கு பேரழிவுகள் ஏற்படும் என்பதை இந்த நாட்டு மக்கள் ஏற்கனவே அனுபவித்திருக்கின்றனர்.

அதனாலேயே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சி மாற்றத்தை அனைத்து மக்களும் இணைந்து ஏற்படுத்தியும் இருந்தனர்”.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்