மஹிந்த தேசப்பிரியவின் கோரிக்கையை அடியோடு நிராகரித்த கோட்டாபய!

30shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கோரிக்கையை அடியோடு நிராகரித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தமது பதவியிலிருந்து விலகுவுள்ளதாக அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.

எனினும் ஜனாதிபதி அந்நேரத்தில் இந்திய சுற்றுப் பயணத்தில் இருந்தமையினால் அப்போது அக்கடிதத்திற்கு பதில் எதுவும் அனுப்பப்படவில்லை.

இந்நிலையில் அக்கடிதத்திற்கான பதில் கடிதத்தை ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தரவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ நாடாளுமன்ற தேர்தல், தேர்தல் சட்டத் திட்ட திருத்தம் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மஹிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் செயற்படுவது அவசியம் என்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்தாண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் முடிவடையும் நிலையில் பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் அடுத்தடுத்து வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்