கொழும்பில் குவிக்கப்படும் பொலிசார்: பதட்டத்தில் மக்கள்!!

204shares

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் செப்டெம்பர் 5 ஆம் திகதியான நாளைய தினம் நடைபெறவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினரின் ஜன பலய போராட்டத்தை முன்னிட்டு இன்றைய தினம் கொழும்பின் பல இடங்களில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.


இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான பொலிசார் வரவழைக்கப்பட்டு கொழும்பு நகரின் பல இடங்களில் பாதுகாப்புப் பணிகளில் அமர்த்தப்பட்டிருப்பதாக எமது கொழும்பு செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இலட்சக் கணக்கான மக்களை அழைத்துவந்து கொழும்பு நகரை முடக்கப்போவதாக சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றும் கனவுடன் கூட்டணி அமைத்து செயற்படும் மஹிந்தவாதிகள் சூளுரைத்து வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளமு் நிலையில் மஹிந்தவாதிகளே குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் வன்முறைகளை தூண்டிவிடலாம் என்று புலனாய்வுத்துறையினர் அரசாங்கத்திற்கும், பொலிசார் உட்பட பாதுகாப்பு தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்திருப்பதை அடுத்தே பாதுகாப்பிற்காக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


எனினும் ஜனநாயக உரிமைக்கமைய அமைதியான முறையில் நாளைய தினம் நடத்தவுள்ள போராட்டத்தை முடக்கவே ஆயிரக் கணக்கில் பொலிசாரை தலைநகரின் அனைத்துப் பகுதிகளிலும் குவித்து கண்டனப் பேரணிக்கு வரும் மக்களை அச்சுறுத்த அரசாங்கம் சதிசெய்து வருவதாக மஹிந்தவாதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். எவ்வாறாயினும் கொழும்பின் பல பகுதிகளில் குறிப்பாக கொழும்புப் பல்கலைககழக சந்தி, கொள்ளுப்பிட்டி சந்தி, லிபடன் சுற்றுவடடம், விகாரமாதேவி பூங்கா, கொழும்பு கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமானன பொலிசார் குவிக்கப்பட்டு செப்டெம்பர் நான்காம் திகதியான இன்று மாலை முதல் பாதுக்காப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை காண முடிவதாக எமது கொழும்பு செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


அதேவேளை ஆங்காங்கே களகத் தடுப்புப் பொலிசாரும், தண்ணீர் பீரங்கி வாகனங்களுடன் நிறுத்தப்பட்டும் உள்ளனர்.


இதையும் தவறாமல் படிங்க
கோத்தபாய தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! கொந்தளிக்கிறது தென்னிலங்கை!

கோத்தபாய தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! கொந்தளிக்கிறது தென்னிலங்கை!

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் சற்று முன்னர் பதற்றம்!

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் சற்று முன்னர் பதற்றம்!

அனைத்துப் பெண்களுக்கும் அவசர எச்சரிக்கை: இலங்கையில் இப்படியும் நடக்கிறது!

அனைத்துப் பெண்களுக்கும் அவசர எச்சரிக்கை: இலங்கையில் இப்படியும் நடக்கிறது!