36.000 போர்த்தாங்கிகளுடன் 3 லட்சம் ரஸ்யபடைவிரைவு! 1000 வான்கலங்கள் 80 கப்பல்கள் பக்கபலம்!!

  • Prem
  • September 11, 2018
150shares

37 வருடங்களுக்குப்பின்னர் ரஸ்யா தனது பெரும் எடுப்பிலான போர்ஒத்திகையொன்றை வோஸ்தொக்- 2018 (Vostok 2018 )என்ற குறியீட்டுப்பெயரில்இன்றுஆரம்பித்துள்ளது. இதுதான் பனிப்போர்காலத்துக்குப்பின்னர் இடம்பெறும் ரஸ்யாவின்மிகப்பெரிய ராணுவஒத்திகை நடவடிக்கையாகும்.

கிழக்கு சைபீரியாவில் ஆரம்பித்த இன்றைய நடவடிக்கை எதிர்வரும்17 ஆந்திகதிவரை நடைபெறும். இந்த நடவடிக்கையில் சீன மற்றும் மொங்கோலிய படைத்துறைகளும்பங்கெடுத்துள்ளன.

நேட்டோ அமைப்புக்கு கடும்சவாலை விடுத்துள்ள இந்த ராணுவபோர் ஒத்திகையில்3 லட்சம் ரஸ்யத்துருப்புக்களுடன் 36,000 ரஸ்ய போர்த்தாங்கிகள் அதிநவீன போர்விமானங்கள்உட்பட 1000 வான்கலங்கள் , 80 கடற்கலங்களும் பங்கெடுத்துள்ளன.

சீனத்தரப்பில் 3.200 படையினரும் 900 போர்த்தாங்கிகளும் 30 விமானங்களும்பங்கெடுத்து வருகின்றன. ரஸ்யாவின் இந்த பிரமாண்டமான போர் ஒத்திகையானது அமெரிக்க தலைமையிலானநேட்டோ ராணுவ கட்டமைப்புக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் விடுக்கபட்ட ஒரு கடுமையானசெய்தியாக நோக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க