வட்டுகோட்டையில் வைத்து தமிழ் மக்களை எச்சரித்த யாழ் கட்டளைத் தளபதி!

202shares

நாட்டில் அமைதிக்கு பங்கம் ஏற்படுமாயின் இராணுவத்தினர்உள்ளிட்ட முப்படையினரும் மீண்டும் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என சிறிலங்காஇராணுவத்தின் யாழ் குடாநாட்டுக்கான முப்படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சிஎச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வவுணதீவில் நவம்பர் 30 ஆம்திகதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன், முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தி பல தகவல்கள் தென்னிலங்கை ஊடகங்களும்,சிங்கள அரசியல்வாதிகளும் முன்வைத்துவரும் நிலையில் டிசெம்பர் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ் கட்டளைத் தளபதி, கடந்த காலத்தை போன்ற பாதுகாப்பு நெருக்குவாரங்கள் அதிகரிக்கப்பட்ட ஒரு சூழல் உருவாகினால் அது தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல்தர்சன கெட்டியாராச்சியின் பணிப்பின் கீழ் புனரமைக்கப்பட்டிருந்த வட்டுக்கோட்டை வளவில் குளம் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ் குடாநாட்டிற்கான முப்படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சனஹெட்டியாராச்சி, தெற்கு மக்கள் மாத்திரமேயுத்தத்தினால் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறினால் அது அடுக்காது என்றுதெரிவித்ததுடன், வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களே 30வருடங்களாக நீடித்த யுத்தத்தினால் மிகுந்த சிரமத்திற்குட்பட்டதாகவும் தெரிவித்தார்.

யுத்தத்தின் போது தமக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியவர்களுடனே தாம் போராடியதாகவும் குறிப்பிட்ட அவர், தமக்கு தமிழ் மக்களுடன் எந்தவொரு கோபதாபமும் இல்லை என்றும் கூறியதுடன், அதனாலேயே யுத்தம் முடிந்தவுடன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் நலன்புரி சேவைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக யாழ் குடாட்டிலுள்ளமக்களுக்கு தனது தலைமையில் இராணுவம் பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் கூறியயாழ் கட்டளைத் தளபதி, அமைதியான சூழலொன்று நிலவுவதாலேயே இவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அமைதி சீர்குலைக்கப்படுமாயின் இராணுவத்தினரும், பொலிசாரும் மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டிய நிலை ஏற்படுவது மாத்திரமன்றி,வீதிச் சோதனைச் சாவடிகள் மீண்டும் ஆரம்பிக்க நேரிடும் என்றும் தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் மீண்டும் கடந்த காலங்களைப் போல் மிகவும் மோசமான நெருக்குவாரங்களை சந்திக்க நேரிடுவது மாத்திரமன்றி பல்வேறு இடையூறுகளுக்கும் முகம்கொடுக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீண்டும் கடந்தகால நிகழ்வுகள் இடம்பெறக்கூடாது என்றால் யாழ்குடாநாடு உட்பட வடக்கு கிழக்கில் வாழும் மக்கள்இராணுவம் உட்பட முப்படையினருடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள சிறிலங்கா இராணுவத்தின் யாழ் மாவட்ட கட்டளைதளபதி மேஜர் ஜெனரல்தர்சன ஹெட்டியாராச்சி, அவ்வாறு இல்லாத பட்சத்தில் மீண்டும்மிக மோசமான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்றும் நேரடியாக எச்சரித்தார்.

இதையும் தவறாமல் படிங்க