கொக்குதொடுவாயில் மீட்கப்பட்ட 15 கிலோ எடை கண்ணிவெடி: மக்கள் அச்சத்தில்

22shares

முல்லைத்தீவு மாவட்டத்தின்கொக்குத்தொடுவாய் மத்தியில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருள் ஒன்று டிசெம்பர்9 ஆம் திகதியான ஞாயிற்றுக்கிழமை மீட்க்கப்பட்டுள்ளது.

தனியார் காணி ஒன்றில்புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விசேட அதிரடிப்படை பொலிசாரால் இந்த வெடிபொருள்மீட்க்கப்பட்டிருக்கின்றது.

காணி உரிமையாளர்பழமரக்கண்று ஒன்றை நடுவதற்காக வீட்டின் பின்புறமாக குழி தோண்டியுள்ளார். இதன்போது மண்ணில்புதைக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு ஒன்று இருந்ததை கண்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாககொக்குத்தொடுவாய் கிராமசேவையாளர் ஊடாக பொலிஸாருக்கு காணி உரிமையாளர் தகவல்வழங்கியுள்ளார்.

இந்நிலையில்நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஞாயிற்றுக்கிழமை நன்பகல் குறித்த பகுதிக்குபொலிஸாருடன் சென்ற விசேட அதிரடிப்படையினர் அபாயகரமான வெடிகுண்டை மீட்டு குறித்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

1984 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினரின்கட்டுப்பாட்டிற்குள் கொக்குத்தொடுவாய் பிரதேசம் கொண்டுவரப்பட்டபோது அந்தப்பகுதிகளில்வாழ்ந்த தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தனர்..

27 வருடங்களின்பின்னர் 2011 ஆம் ஆண்டு மீண்டும் தமது சொந்த ஊரில் கொக்குத்தொடுவாய் மக்கள் மீள்குடியேறியபோதுஅந்தப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டு பாதுகாப்பானபிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே 15 கிலோ எடை கொண்டவெடிபொருள் ஒன்று கொக்குத்தொடுவாய் மத்தியில் மீட்க்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ளகொக்குத்தொடுவாய் மக்கள் தமது பகுதியை மீள வெடிபொருள் அகற்றும் நடவடிக்கைக்கு உட்படுத்துமாறுகோரிக்கை விடுத்துள்ளனர்

இதையும் தவறாமல் படிங்க