பாவங்கள் நீங்க, தொழில் குடும்பம் சிறக்க தமிழர்கள் கடைபிடித்த எளிமையான வழிபாட்டு முறை இதோ!

35shares

செய்கையில் ஈடுபடாவிட்டாலும் மனதளவில் தீங்கு நினைத்தாலே பெரும் பாவம் என்கிறது வேதங்கள். இறைவடிவாக வாழ்ந்துவிட்டு சென்ற மகான்களும் அதையே நமக்கு வலியுறுத்துகின்றனர். பாவங்கள் நீங்க பிராய்ச்சித்தமாக விரத, பரிகார முறைகளையும் கூறியுள்ளனர்.

இதில் சூரிய வழிபாடு உலகம் முழுக்க பல நாகரிங்களை பின்பற்றி வாழ்ந்த மக்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த ஒன்று. சீனா, எகிப்து, மெசபடோமியா என பல நாடுகளிலும் இது வழக்கத்தில் இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

அறிவியலின் படி உலக இயக்கத்திற்கும் உயிர்வாழ் தேவையான உணவு உற்பத்திக்கும் சூரிய சக்தி மிக மிக அவசியம்.

தமிழில் தற்போது நிகழும் மாதம் தை. அண்மையில் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினோம். அது போல இம்மாதத்தில் வளர்பிறையில் வரும் சப்தமி திதி சூரியனை வணங்க வேண்டிய ரத சப்தமி நாளாக கொண்டாடப்படுகிறது.

காரணம் தெற்கு நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு சூரிய வடக்கு நோக்கி நகரும் இந்த நாளை பண்டைய மக்கள் ரத சப்தமி நாளாக கொண்டாடினர். தை அமாவாசையை தொடர்ந்து வரும் 7 ம் நாளே இந்த சப்தமி.

அதே போல ஜோதிடத்தில் சூரியனுக்குரிய ராசி சிம்மம். சூரியன் ஒரு ராசியை கடக்க 1 மாத காலமாகும் எனவும் தை மாதத்தில் சிம்மராசியில் சூரியன் உச்சம் அடைகிறது எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அதே போல பருவகாலத்தின் அடிப்படையில் வசந்த காலத்தின் தொடக்க நாளாகவும், விவசாய அறுவடை செய்யும் நாளாகவும் இது அமைகிறது.

இப்படியான இந்த சிறப்பு மிகுந்த நாள் வரும் ஃபிப்ரவரி மாதம் 1 நாள் வருகிறது. ரத சப்தமியும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் நாம் செய்ய வேண்டியது:-

சூரிய உதயத்தின் போது தலையில் 7 அல்லது 9 எருக்க இலைகளை அடுக்கி, அதன் மீது அட்சதை, எள் வைத்து ஆணாக இருந்தால் விபூதியும், பெண்ணாக இருந்தால் மஞ்சளும் வைத்து நீராடி குளிக்க வேண்டும்.

கம்பி வழியே எப்படி மின் சக்தி இழுக்கப்படுகிறதோ அது போல சூரிய சக்தி எருக்க இலைகளால் ஈர்க்கப்பட்டு நம் உடலில் செலுத்தப்படுகிறது. இதனை நோய்கள் உபாதைகள் நீங்க நம் முன்னோர்கள் பின்பற்றினர்.

குளித்த பின் மெழுகிய வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் சூரிய ரத கோலமிட்டு, அதில் சூரிய சந்திரரை வரைந்து கிண்ணத்தில் அரிசி, பருப்பு, வெல்லம் பரப்பி, பிரசாதமாக சர்க்கரை பொங்கல் , உளுந்து வடை வைத்து வழிபட சூரியன் மகிழ்ந்து உலகிற்கும், தன்னை வழிபடுவர்களுக்கு நன்மை புரிகிறார்.

நன்மைகளும் பலன்களும்:-

ரத சப்தமி நாளில் புனித நதிகளில், கடலில் நீராடினாலோ, தொழில் தொடங்கினாலோ, புண்ணியம் தரும் தரும காரியங்கள் செய்தாலோ அது இரட்டிப்பான பலன்களை தரும்.

முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைந்து குடும்பத்தின் சாபங்கள் நீங்கி அமைதியும், மகிழ்ச்சியும், செல்வமும் உண்டாகிறது.

கோவில் சிறப்புகள்:-

இந்தியாவின் கொனார்க் சூரிய கோவில், தமிழ் நாட்டின் தஞ்சை சூரியனார் கோவில், திருப்பதி வெங்கேடச பெருமாள் கோவில், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்கள் சிறப்பு வழிபாடுகளும், விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்