வாழ்வில் வறுமை நீங்க சொல்ல வேண்டிய எளிமையான தமிழ் மந்திரம்! வெள்ளிக்கிழமை சிறப்பு

  • Raana
  • February 06, 2020
81shares

உலகில் படைக்கப்பட்ட பல விசயங்கள் எல்லாமே இரண்டாக தான் அமைந்திருக்கும். உதாரணமாக இரு துருவங்கள், துன்பம், இன்பம், ஆண், பெண் என இரண்டு இரண்டாக அமைந்ததுவே.

அவ்வகையில் புண்ணியம் செய்ததால் தான் நாம் இந்த பூமியில் மனிதராய் பிறந்து நன் முறையில் வாழ்ந்து இறைவனை அடையும் வரம் பெற்றிருக்கிறோம். பிறவா வரம் வேண்டும் பல மகான்களும் பாடியுள்ளார்கள்.

இப்படியான மனிதப்பிறப்பில் நம் வாழ்க்கையில் நாம் துன்பங்களை சந்திப்பது உண்டு. தமிழ் மூதாட்டியான அவ்வை பாட்டி கூட வறுமை கொடிது என கூறியுள்ளார். அப்படியான வறுமைகள் நீங்க உறுதுணையாக இருப்பது அபிராமி அந்தாதி.

அம்பிகையின் நினைப்பிலேயே மூழ்கிய அபிராமி பட்டர் அமாவாசை நாளை பௌர்ணமி எனக்கூறி மன்னரின் தண்டனைக்கு ஆளாகி கடைசியில் அம்பிகையே நேரில் தோன்றி பௌர்ணமி நிலவாக காட்சியளித்து அருள் செய்த திருவிளையாடலும் வரலாறாக ஆனதுண்டு.

அப்படியாக அந்த சிறப்புகள் பல மிகுந்த அபிராமி அந்தாதியில் வறுமைகள் நீங்க ஒரு பாடலும் இடம் பெற்றுள்ளது. அபிராமி பட்டர் எழுதிய இந்த அந்தாதி பாடலை இந்த வெள்ளிக்கிழமை நாளில் பாராயணம் செய்வோம்...

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே.

இதையும் தவறாமல் படிங்க
உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

சீனாவில் வெடித்தது புதிய சர்ச்சை! என்ன செய்ய போகிறது சீன அரசு?

சீனாவில் வெடித்தது புதிய சர்ச்சை! என்ன செய்ய போகிறது சீன அரசு?