சிவலிங்கத்தின் உண்மை பின்னணி என்ன? அவை உணர்த்தும் விஷயங்கள் இதோ...

  • Raana
  • February 09, 2020
94shares

சிவலிங்க வடிவம் உணர்த்தும் செய்தி என்ன என தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் அண்மை காலமாக அதிகம் எழுந்திருக்கும் தானே. சிவலிங்கம் வழிபாடு இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகம் காலம் தொட்டே இருந்து வருவதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன.

இந்து சமயத்தின் பிரதான தெய்வமாக திகழும் சிவபெருமான் பல ஆலயங்களில் லிங்க வடிவிலேயே காட்சி தருகிறார்.உண்மையில் லிங்கம் என்ற சொல் சம்ஸ்கிருதம் மொழியை சேர்ந்ததாக சொல்லப்படுகிறது.

அதே வேளையில் லிங்கம் சிவனின் அருவருவ நிலையை குறிக்கிறது. இதில் லிம் என்பது உயிர்களின் தோற்றத்தையும், கம் என்பது உயிர்களின் ஒடுக்கத்தையும் குறிக்கும். எனவே லிங்கமாக இருக்கும் சிவன் உயிர்கள் தோன்றவும், ஒடுங்கவும் உரியவராக இருக்கிறார் என்பது வேத நம்பிக்கை.

அதே வேளையில் இந்தியா முழுக்க இருக்கும் பல சிவலிங்கம் மற்ற தெய்வங்கள், அரசர்கள், மகான்கள் வழிப்பட்டதாக வரலாற்று சிறப்புகளும் இருக்கின்றன.

ஒரு முறைகள் மும்மூர்த்திகளில் பிரம்மாவும் விஷ்ணுவும் தங்களுக்குள் யார் பெரியவர் என சண்டையிட்டுக்கொண்ட போது, அவ்விடத்தில் தோன்றிய சிவன் அவர்களிடத்தில் தன்னுடைய அடியையும், முடியையும் யார் முதலில் காண்கிறார்களோ அவரே பெரியவர் என கூறி தான் தீச்சுடராக மாறினார்.

உடனே பிரம்மா அன்னத்தின் மீதமர்ந்து சிவனின் முடியை காண செல்கிறார். விஷ்ணு சிவனின் அடியை காண பாதாள உலகத்திற்கு வராக அவராத்தில் செல்கிறார்.

கடைசியில் அவர்கள் இருவரும் அடி, முடி தெரியாமல் திகைத்து நின்றார்கள். இப்படியாக உருவானதே சிவலிங்கம் வடிவம் என்று சொல்லப்படுகிறது. இதன் சாட்சியாக சிவ ஆலயங்களில் சுவாமி சன்னதியின் பின் இருக்கும் லிங்கோத்பவர் என்றும் ஆலய குறிப்புகள் சொல்கின்றன.

மேலும் விண்ணுக்கும் மண்ணுக்குமான தொடர்பை விளக்கும் விதமாகவும் லிங்கம் அமைந்துள்ளது. அத்துடன் ஆண், பெண் இணைந்த வடிவமாகவும், மும்மூர்த்திகளின் வடிவாகவும் கருதப்படுகிறது.

இந்த லிங்கத்தில் பூமி பாகம் பிரம்மனையும், நடுபாகம் விஷ்ணுவையும், தலைப்பகுதி ருத்ரனையும் குறிக்கிறது. மேலும் லிங்கம் ஆண், பெண் குறிகளையும் குறிப்பதாக சொல்லப்படுகிறது.

அத்துடம் தமிழகத்தின் பல பகுதிகளில் சிவனை வழிபடும் சைவர்கள் லிங்கம் போல நடுகல் கற்களை வைத்து வழிபடும் பழக்கத்தை பின்பற்றியுள்ளனர்.

இறந்தோரின் நினைவிடங்களிலும், சமாதிகளிலும் நடுகல் வைத்து வழிபடும் வழக்கம் சிவலிங்கத்தின் வழிபாடு தொடக்கம் என்றும் சொல்லப்படுகிறது.

சிவலிங்கள் பல வகை:-

சுயம்பு இலிங்கம் - தானாய் தோன்றிய இலிங்கம்.

தேவி இலிங்கம் - தேவி சக்தியால் வழிபடப்பட்ட இலிங்கம்.

காண இலிங்கம் - சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட இலிங்கம்.

தைவிக இலிங்கம் - மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட இலிங்கம்.

ஆரிட இலிங்கம் - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட இலிங்கம்.

இராட்சத இலிங்கம் - இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட இலிங்கம்.

அசுர இலிங்கம் - அசுரர்களால் பூசை செய்யப்பட்ட இலிங்கம்.

மானுட இலிங்கம் - மனிதர்களால் பூசை செய்யப்பட்ட இலிங்கம்.

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய