கவலையில்லாத வாழ்க்கை அமையவேண்டுமா? இந்த நாளில் இந்த முறையை பின்பற்றினால்...

  • Raana
  • February 12, 2020
110shares

மனிதனாக பிறந்த ஓவ்வொருவருக்கும் வாழ்வில் இன்பமும், துன்பமும் மாறி மாறி பயணம் செய்கின்றன. சந்தோசப்படுவதும் நாம் தான். கவலை கொள்வதும் நாம் தான்.

கவலைகள் உயிரோடு மனிதரை எரிக்கும் என்பார்கள். அக்கவலைகளே நமக்கு சில நேரங்கள் பல நோய்களை உண்டாக்குகின்றன. எல்லாம் இறைவன் செயல், அவனிருக்க வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையே நமக்கு பல தீர்வுகளை கொடுக்கிறது.

அதே வேளையில் பக்தியுடன் நாம் செய்யும் ஆன்மீக வழிபாடும், தெய்வ தொண்டுகளும் தான் மனிதனை நல்வழிப்படுத்துக்கின்றன. மனதை அமைதியடையச் செய்கின்றன.

உலக இயக்கத்திற்கு காரணமாக இருப்பவர் சிவபெருமான். அவருக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. மார்கழி மாதம் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரம் ஆருத்திர தரிசன நாளாக அனைத்து சிவாலங்களிலும் கொண்டாடப்படுகின்றன.

அதே வேளையில் மாதந்தோறும் வருகின்ற திருவாதிரை நட்சத்திர நாளில் சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் கவலைகள் அகலும். வாழ்க்கை சந்தோஷம் அடையும்.

அதே போல வாழ்க்கையில் நன்றாக இருந்த சிலருக்கும் நேர கால மாற்றத்தில் வாழ்க்கை திடீரென ஆட்டம் கண்டிருக்கும். இதனால் வாழ்க்கையின் போக்கை நினைத்து மன அமைதி இழந்திருப்பார்கள்.

அதே வேளையில் இப்படியான இன்னலுக்கு ஆளானவர்கள் திருவாதிரை நட்சத்திர நாளில் லிங்மாக உறையும் சிவ திருவடிவமான நடராஜ சுவாமியை வழிபட வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் சமமாகும்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி