சாஸ்திரத்தை நம்பும் பெண்களுக்கு மட்டும்.. விசேஷ நாட்களில் ஏன் ஏற்படுகின்றது?

44shares

நிறைய வீடுகளில் பெண்களுக்கு விசேஷ நாட்கள், சுப காரியங்கள் மற்றும் பூஜை புனஸ்காரங்கள் நேரத்தில் மாதவிடாய் ஏற்பட்டு, அந்த பூஜையில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

நம்முடைய முன்னோர்கள், அதாவது நம் பாட்டிமார்கள் இருக்கும் வீடுகள் என்றால், இதற்கு என்ன காரணம் என்பதை, அவர்கள் கட்டாயம் இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுத்து இருப்பார்கள். ஏனென்றால் நம்முடைய அம்மாக்களுக்கும், பாட்டிகளுக்கும் இதற்கு என்ன காரணம் என்பது கட்டாயம் தெரிந்திருக்கும்.

விசேஷ நாட்களில் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவதற்கு என்ன காரணம், என்பதைப் பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்?

நம்முடைய வீட்டை கூட்டி சுத்தம் செய்யும்போது பெண்கள் அந்தக் குப்பையை உடனே வாரி குப்பை கூடையில் அல்லது வெளியிலோ கொட்டிவிட வேண்டும். அதை விட்டுவிட்டு, கூட்டிய குப்பைகளை மூலையில் எப்போதுமே ஒதுக்கி வைக்கக் கூடாது.

சில பெண்கள் கொஞ்சம் பெரிய அளவிலான குப்பையை மட்டும் கைகளால் வாரி போட்டுவிட்டு, கையில் எடுக்க முடியாத தூசு தும்பு இருக்கும். அதை துடைப்பத்தால் அப்படியே மூலையில் ஒதுக்கி விடுவார்கள். அதுவும் மிகப்பெரிய தப்பு தான். அப்படி ஒதுக்கி வைக்கும் பட்சத்தில், நாமும் விசேஷ நாட்களில் ஒத்திவைக்கப்படுவதாக சாஸ்திரம் சொல்கின்றது.

இதில் எல்லாம் எங்களுக்கு நம்பிக்கையே கிடையாது! மாதவிலக்கு என்பது இயற்கையான ஒன்று என்று, நினைப்பவர்களுக்கு இந்த சாஸ்திரம் சொல்லப்படவில்லை.

சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், இனி உங்களுடைய வீட்டில் இந்த தவறு செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இது அல்லாமல் உங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத ஏதாவது தோஷம் இருந்தால் கூட, விசேஷ நாட்களில் மாதவிலக்கு வரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதை நிவர்த்தி செய்வதற்கு பரிகாரங்களையும் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

எப்படிப்பட்ட தோஷத்தையும் நிவர்த்தி செய்யும் சக்தி அருகம் புல்லுக்கு உண்டு. இந்த அருகம் புல்லோடு கொஞ்சம் வேப்பிலையையும் சேர்த்து கொள்ளலாம். அந்த அருகம் புல்லையும், வேப்பிலையையும் முதல் நாள் இரவு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக அந்த அறுகம்புல் வாடமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மறுநாள் காலை, நீங்கள் குளிக்கும் தண்ணீரில், சிறிது அருகம்புல், ஒரு கொத்து வேப்பிலையை உருவி போட்டு, ஒரு சிறியளவு மஞ்சள் தூளை கலந்து தலை வைத்து ஸ்நானம் செய்தல் வேண்டும்.

இதே போல் தொடர்ந்து 11 நாட்கள் காலை தலை ஸ்நானம் செய்து வந்தால், உங்களுக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு, விசேஷ நாட்களில் மாதவிடாய் வருவது குறைக்கப்படும் என சாஸ்திரம் சொல்கிறது.

இந்த பரிகாரத்தை மாதவிடாய் நாட்களில் கட்டாயம் செய்யக் கூடாது. இப்படிப்பட்ட சாஸ்திர முறைகளில் நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து வரும் பட்சத்தில் நிச்சயம் பலன் உண்டு.

Tags : #People #Women
இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..