மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நாள்! தவற விட்டுவிட வேண்டாம் - புண்ணியம் தரும் சிறப்பு

  • Raana
  • September 16, 2020
107shares

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் புண்ணியம் தரும் என அழைக்கப்படுகிறது. நாளைய தினம் அமாவாசைகளில் முதன்மையானதாக இருக்கும் அமாவாசையான மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு உகந்ததாகவும், அவர்களின் அருளையும், ஆசிர்வாதத்தை பெற உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

அமாவாசை நாளில் இறந்து போன நம் முன்னோர்களுக்கு செய்யும் கடன்களை நீத்தார் கடன், பித்ரு கடன், சிரார்த்தம் என அழைப்பார்கள். அதிலும் மகாளய பட்சமாக கணக்கிடப்படும் இந்த அமாவாசையின் 15 நாட்களுக்கு முன்பிருந்தே இறந்து போன நம்முன்னோர்கள் எமதர்மனின் அனுமதியுடன் நம்மை காணவருவதாக ஐதீகம்...

நாளைய தினம் செப்டம்பர் 17 ம் நாள் வியாழக்கிழமை மகாளய அமாவாசை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதிலும் புரட்டாசி மாத பிறப்பில் இடம் பெறுவது சிறப்பு.

முன்னோர்களை நாம் சரியான முறையில் நினைத்து வழிபட்டு வந்தால், குடும்பத்தில் பிரச்சனைகள் இருக்காது, மன அமைதிக்கு வழிவகுக்கும், சுப விசேஷங்கள் நடைபெறும்.

முன்னோர்களின் சாபங்கள் நீங்க, வம்சம் விருத்தி அடைய இதுபோல அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், ஏழை எளியோர்க்கு அன்னதான செய்தலும் நன்மை பயக்கும்.

மேலும் இதே புரட்டாசி மாத இறுதியில் ஓர் அமாவாசை இடம் பெறுகிறது. அதனால் இம்மாதத்தில் இரண்டு அமாவாசைகள் இவ்வருடத்தில்...

புரட்டாசி மாத மகா ரகசியம் இந்த வீடியோவில்...

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!