மூன்று மணித்தியாலத்துக்கு ஒருவர் சாவு; அதிர்ச்சித் தகவல்!

7shares
Image

இலங்கையில் நாளாந்தம் எட்டுப் பேர் வீதி விபத்துக்களால் மரணம் அடைவதாக ஸ்ரீலங்காவின் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய பேரவை அறிவித்துள்ளது.

அத்துடன், நாடெங்கிலும் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒருவர் வீதி விபத்துக்களால் பலியாவதாக தெரிய வந்துள்ளது என்றும் தேசிய பேரவை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்களினால் மூவாயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்காயிரத்து 300 பேர் அங்கவீனர்களாகியுள்ளதாகவும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய பேரவை மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை வீதி விபத்துக்கள் அடிப்படையில் உந்துருளியில் பயணமாகி விபத்துக்களைச் சந்திப்பவர்களே அதிகம் சாவடைவதாக மற்றொரு ஆய்வில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதிகரித்த வேகம், வீதி ஒழுக்க விதிமுறைகளைப் பின்பற்றாமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துதல் முதலான காரணங்களே இந்த விபத்துக்களுக்கு மூலாதாரமாக சொல்லப்படுகின்றன.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
ஜெயலலிதாவுக்காக எரித்து கொல்லப்பட்ட 3 மாணவிகள் - ஓர் நினைவுப்பகிர்தல்.!

ஜெயலலிதாவுக்காக எரித்து கொல்லப்பட்ட 3 மாணவிகள் - ஓர் நினைவுப்பகிர்தல்.!

விடிந்தால் கல்யாணம்; மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

விடிந்தால் கல்யாணம்; மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!