ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு எதிராக முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்!

230shares
Image

இராணுவத்தினாலும், வனவிலங்கு அதிகாரிகளினாலும் சுவீகரிக்கப்பட்ட அஸ்ரப் நகர் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் மக்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

அதிகாரிகளே எழை மக்களின் காணிகளை சுரண்டாதே, வாழ்வதற்கு எமது காணியை வழங்கு, நல்லாட்சி அரசே எமக்குச் செய்யும் நீதி இதுதானா?, இதற்கு எத்தனைதான் ஆர்ப்பாட்டங்களைச் செய்வது, காணி தாரும் காணி தாரும் காணியைப்பெற நீதியைத் தாரும் நல்லாட்சி அரசே, என்ற சுலோகங்களை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக பிரதேச செயலகத்திற்குள் சென்று பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜிடம் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்ததுடன் இது தொடர்பான மேலதிக நடவடிக்கையினை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

காணிகளை இழந்த நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அல்லல் துன்பங்கள் நீடித்துக் கொண்டே செல்கின்றது. நாமும் இந்நாட்டின் பிரஜைகள். ஒரு காணித்துண்டில் குடியிருப்பதற்கும் எங்களது வாழ்வாதாரமான பயிர்ச்செய்கையினை மேற்கொண்டு எமக்காவும் நாட்டுக்காகவும் உழைக்க உரித்துடையவர்கள். இருந்தபோதிலும் உரிமை மறுக்கப்பட்டு ஒரு தசாப்தம் முடியப்போகின்றது. இன்னும் நியாயம் கிடைக்கவில்லை என்று மகஜரில் பிரதானமாகக் குறிப்பிட்டுள்ளதுடன், பிரதானமாக மேலும் இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

1. 2016-ம் ஆண்டு 11-ம் மாதம், 02-ம் திகதி விடுத்த எமது கோரிக்கைக்கு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக எமக்கு அறியத்தர வேண்டும்.

2. எமது காணிகளை மீளளிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி விரைவாகக் காணிகளை மீளளிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் அடங்கிய பிரதான கோரிக்கைகளுடன் குறித்த மகஜர் பிரதேசசெயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`