புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

  • Shan
  • June 12, 2018
2224shares

வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தின் போது வெள்ளை நாகம் ஒன்று காட்சி கொடுத்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு நேற்று திங்கட் கிழமை இடம்பெற்றது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகதம்பிரானை நோக்கி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

இதன்படி நேற்று இரவு நாகதம்பிரானுக்குரிய பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆலயத்தினுள் உள்ள தூண் ஒன்றின் மேலிருந்து பக்தர்களை நோக்கி குறித்த நாகம் தலையைத் தொங்கவிட்டுள்ளது.

இதனால் ஆலயத்திற்கு வருகை தந்த மக்கள் ஆச்சரியமும் பரவசமும் அடைந்து அந்தப் பாம்பினை நோக்கி அரோஹரா அரோஹரா என ஒலித்தவாறே வழிபட்டனர்.

எவ்வாறாயினும் சில நிமிடங்களே அங்கு காட்சி கொடுத்த வெள்ளை நாகம் பின்னர் அங்கிருந்து மறைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`